ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



ஞாயிறு, 25 ஜனவரி, 2015

பெண்களின் கண்கள் - முதல் தருணம்

முன்/பின் அறிமுகமில்லாத பெண்களின் கண்களை தீண்டும்  முதல் தருணம், இந்த முப்பத்தந்தை கடந்த வயதிலும் மறக்க இயலா தருணங்கள்.

உள்ளூரில் எட்டாம் வகுப்பு முடித்து, சங்கீதமங்கலம் உயர்நிலைப் பள்ளி சேர்ந்த முதல் தருணத்தில் தீண்டிய சரஸ்வதியின் கண்கள்

அக்கா திருமணமாகி சென்றபின், அக்கா வீட்டிற்கு சென்ற முதல் தருணத்தில், அந்த தெருவிலிருந்த ரதியின் கண்கள்

பத்தாம் வகுப்பு தேற முடியாமல், நகரிக்கு விசைத் தறி வேலைக்கு சென்ற முதல் தருணத்தில் சந்தித்த புவனாவின் கண்கள்

அங்கு சூழ்நிலை பிடிக்காமல், திருச்செங்கோட்டின் போர் வண்டி வேலைக்கு சென்றபோது, அந்த முதலாளியின் மகள் கண்மனியின் கண்கள்

போர் வண்டியில், மகாராஷ்ட்ராவின் நிவாஸ்பாட்டா ஊரில், மொழி தெரியாமல் பேசிக்கொண்ட விழிகளுக்கு சொந்தக்காரி, கரிஸ்மாவின் கண்கள்

மீண்டும் அண்ணன்,அக்கா, தம்பிகளை மறக்க முடியாமல், தேடிவந்து, படிக்க எண்ணி, தொலை தூரக்கல்வி வகுப்பில் சந்தித்த சஃப்ராபியின் கண்கள்

அது படித்துக்கொண்டிருக்கும்போது, ஊர் திரும்பிய மழை நேர மாலைப்பொழுதில், சந்தித்த ரீகா வின் கண்கள்

பெண் பார்க்கும் படலத்திற்கு முன்பான, எதேச்சையான ஒரு நிகழ்வில் சந்தித்த என் மனைவியின் கண்கள்

மும்பை அலுவலகத்தின் அருகில், உணவகம் வைத்திருந்த கரீனாவின் கண்கள்

முதல் வாடிக்கையாளர் சந்திப்பில், சாஃப்ட்வேர் டெமோ பார்க்க அமர்ந்திருந்த குழுவின் தலைவி கிஞ்ஞால் ச்சேடா வின் கண்கள்

இப்படி மறக்க இயலா தருணங்களை, மறக்க இயலாமல் நினைவுக்கு கொண்டு வந்த நேற்றைய, பயிற்சி பட்டறையில் சந்தித்த அந்த பெயர் தெரியா பெண்ணின் கண்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.


சனி, 25 ஜனவரி, 2014

ஜெயமோகன் - வெண்முரசு - இணைப்புகளின் தொகுப்பு


வியாசனின் பாதங்களில்.........

வெண்முரசு - முதற்கனல் - 01

வெண்முரசு - முதற்கனல் - 02

வெண்முரசு - முதற்கனல் - 03


வெண்முரசு - முதற்கனல் - 04

வெண்முரசு - முதற்கனல் - 05

வெண்முரசு - முதற்கனல் - 06

வெண்முரசு - முதற்கனல் - 07

வெண்முரசு - முதற்கனல் - 08

வெண்முரசு - முதற்கனல் - 09

வெண்முரசு - முதற்கனல் - 10

வெண்முரசு - முதற்கனல் -11

வெண்முரசு - முதற்கனல் - 12


வெண்முரசு - முதற்கனல் - 13


வெண்முரசு - முதற்கனல் - 14

வெண்முரசு - முதற்கனல் - 15

வெண்முரசு - முதற்கனல் - 16

வெண்முரசு - முதற்கனல் - 17

வெண்முரசு - முதற்கனல் - 18

வெண்முரசு - முதற்கனல் - 19

வெண்முரசு - முதற்கனல் - 20

வெண்முரசு - முதற்கனல் - 21

வெண்முரசு - முதற்கனல் - 22

வெண்முரசு - முதற்கனல் - 23

வெண்முரசு - முதற்கனல் - 24

வெண்முரசு - முதற்கனல் - 25

வெண்முரசு - முதற்கனல் - 26

வெண்முரசு - முதற்கனல் - 27

வெண்முரசு - முதற்கனல் - 28

வெண்முரசு - முதற்கனல் - 29  

வெண்முரசு - முதற்கனல் - 30

வெண்முரசு - முதற்கனல் - 31

வெண்முரசு - முதற்கனல் - 32

வெண்முரசு - முதற்கனல் - 33

வெண்முரசு - முதற்கனல் - 34

வெண்முரசு - முதற்கனல் - 35

வெண்முரசு - முதற்கனல் - 36

வெண்முரசு - முதற்கனல் - 37

வெண்முரசு - முதற்கனல் - 38

வெண்முரசு - முதற்கனல் - 39

வெண்முரசு - முதற்கனல் - 40

வெண்முரசு - முதற்கனல் - 41

சித்தார்த் அவர்கள் மிக அற்புதமாக ஒரு தளத்தை, வெண்முரசுக்காகவே வடிவமைத்துள்ளார்கள். எனவே இதன் தேவை முடிவடைந்ததாக கருதி அந்த இணைப்பை கொடுத்துள்ளேன்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

என் மகன் எழிலன்

நம்மை ஒவ்வொரு தினமும் ஆச்சரியமூட்டும் பிள்ளைகள்.

என் மகனுக்கு 6வது வயது துவங்கி சில மாதங்கள் ஆகிறது. அன்றொரு நாள் காலை எழுந்ததும் என் மனைவி என்னிடம், பையன் கண்ணுக்கு தெரியாமல் நீங்க மறைஞ்சுக்கோங்க. ஏன்னு கேட்டேன்? தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அழுது அடம் பிடிப்பான்ல, ஸ்கூலுக்கு கிளம்பி போற வரைக்கும். ஆமாம், அதுக்கும் நான் மறைஞ்சிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம். நான் சொல்வேன்ல, நீங்க ஊரிலில்லாத நாள்லலாம் அவன் ஒழுங்கா கிளம்பிப் போவான்னு, ஆனா நீங்க நம்ப மாட்டீங்க இல்ல. அதுக்குத்தான் இப்போ வேடிக்கைய பாருங்க!

சரின்னு நானும், வீட்டிலேயே அவன் புத்தகம்லாம் வச்சிருக்கிற எடத்துல இருக்கிற மேசைக்கு கீழே ஒளிஞ்சிகிட்டேன்(அங்கதான் அவன் பாக்க மாட்டான்).

காலையில எழுந்த உடனே, டீயை குடிச்சிட்டு அப்பா எங்கன்னு கேட்டான்? அவரு ஆஃபீஸ்ல வேலை இருக்குன்னு சீக்கிரம் கிளம்பிட்டாருன்னு சொன்னாங்க. பய புள்ள உடனே வெளிய எட்டிப்பார்த்து வண்டி நிக்குது பொய் சொல்றியா?ன்னு அவங்க அம்மாவைக் கேட்டான். இல்ல அப்பா வண்டி ரிப்பேருன்னு, கபிலன் அங்கிள் கூட போயிருக்காருன்னு சொன்னாங்க. அடுத்து பயபுள்ள பார்த்த இடம், ‘அம்மா, ஷூ இருக்கு செருப்பும் இருக்கு’ எப்பிடி போனாரு? அவசரத்துல மறந்து போயிட்டாருன்னு சொன்னாங்க. சரின்னு குளிக்கப் போயிட்டான். குளிச்சிட்டு வந்து யூனிஃபார்ம் போட போய், அம்மான்னு காட்டுக்கத்தல் கத்துனான். இன்னாடான்னு வந்தா, அடுத்த கிடுக்கிப் பிடி கேள்வி, எந்த சட்டை போட்டுட்டு போனாரு, இங்க பாரு பேனா இருக்கு பர்ஸ் இருக்கு எதையுமே எடுக்காம எங்க போனாரு. ஃபோன் பண்ணி பாக்கட்டா?(நம்பர மனப்பாடம் பண்ண வச்சது தப்பா போச்சி)

அய்யோய்யோ, ஃபோனை சைலண்ட்ல போட மறந்துட்டேனே!

ஒரு மாதிரி சமாளிச்சி, சாப்பிட வச்சி-அம்மா, அப்பா சாப்பிட்டுட்டு போனாரா? சாப்பிடாமயே ஓடிப்போயிட்டானா?. வந்து சாப்பிடறேன்னு சொன்னாரு’ன்னு சொன்னாங்க. அப்பிடின்னா வந்து சாப்பிட்டுட்டு என்னை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போவாங்களா?

ஒரு மாதிரி சமாளிச்சி லன்ச்ச கட்டி கையில குடுத்து, ஸ்கூலில் விட்டிட்டு வந்து என்கிட்ட சொன்னாங்க, இனிமே தினமும் காலையில அவன் அடம் பிடிச்சான்னா அதுக்கு காரணம் நீங்க குடுக்கிற செல்லம்தான்னு புரிஞ்சிக்கோங்க’ன்னு!

ஆமாம், இந்த பயபுள்ள<<எழிலன்>>க்கு என்னைப் பார்த்தா மட்டும் இளிச்சவாயனாத் தெரியுமோ?

சனி, 16 ஜூலை, 2011

செவ்வாய், 12 ஜூலை, 2011

No Commetns!!!!

அய்! நான் பள்ளியோடத்துக்கு போறனே!!!!

திங்கள், 11 ஜூலை, 2011

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

நட்பு

முகம்நக நட்பது நட்பன்று  நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.

நேற்றைய தூக்கமில்லா இரவில், தூங்குவதற்கு கடுமையான முயற்சிகள் எடுத்தும், நித்திரை நான் உன்னை நெருங்க மாட்டேன் என போராட்டம்  நடத்தியதால் முயற்சியை கைவிட்டு இணையத்தில் மேய ஆரம்பித்தேன். அப்போது கடந்த சில பதிவுகளில் ஒன்று நட்பைப் பற்றி ஆராய்ந்து, ஆதங்கப்பட்டது.


உடன் என் கற்பனை சிறகடிக்க ஆரம்பித்தது(காசா? பணமா?).

நான் கடந்து வந்த பாதையில் சில நண்பர்கள்:-

உடன் பயின்ற வகுப்புத் தோழர்கள்:
ஜெயப்பிரகாஷ்: நாங்க இரண்டு பேரும் நல்லா படிக்கிற பசங்கன்னு ஊரே நம்புச்சி(நம்புங்கப்பா), நான் எது பண்ணாலும் எனக்கு துணை நின்னவன். என்னை காட்டி கொடுக்காதவன். இப்ப எங்க இருக்கான் என்ன பண்றான்னே தெரியல?

மணிவாசகம்: எங்க கேங்ல இன்னொருத்தன், நட்புக்கு மேல ரெண்டு பேரயும் வேற எதோ ஒண்ணு இணைச்சிருந்தது. சமீபத்துல சவுதில விபத்துல இறந்துட்டான்.

சக்திவேல்: ரஷ்யா மற்றும் அமெரிக்க பனிப்போர் போல, பள்ளி காலத்துலேருந்து இன்னமும் ரெண்டு பேருக்கும் நடுவில ஒரு மௌனப்போர் நடந்துகிட்டேருக்கு. ஆனாலும் நட்பு தொடர்வது, எனக்கு புரியாத ஒரு விஷயம்.

பள்ளி தாண்டி சொந்த ஊர் நண்பர்கள்:

சரவணன்: எங்க கேங்ல வயசால மூத்தவன். ஆனாலும் வாடா போடா, மாமன் மச்சான் நண்பன்.

சிவபாலன்: காரணம் புரியாமலேயே நட்பு பாராட்டுபவன்.

வெங்கடேச பெருமாள்: அண்ணனாகவும் நண்பணாகவும் இருக்க முடியும் என்று, இன்று வரை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.

பள்ளி தாண்டி, ஊர்ப்பாசம் தாண்டிய நண்பர்கள்:

செந்தில்நாதன்: ஒரு சிறு உரசலில் ஆரம்பித்த நட்பு, பதினைந்து வருடங்களை கடந்து கொண்டிருக்கிறது.

சேதுசங்கர்: வயதில் மிக மூத்தவர். ஆனாலும் நண்பர்.

எரிக் மாணிக்கம்: குருவுக்கு குருவாய், நட்புக்கு நட்பாய் ................

கணேஷ் அவுட்டி(Ganesh Auti): மகராஷ்ட்ரத்தின் ஒரு சிறு நகரத்தை சேர்ந்தவன். ஆங்கிலமும் தெரியாமல், ஹிந்தியும் தெரியாமல்(புரியாமல்) நான் மும்பையில் தத்தளித்த போது, என்னைக் கைப்பிடித்து கரை சேர்த்த தோழன்.

ராஹுல் கும்பாரே(Rahul khumbare): என்னுடைய மும்பை அணியில், என்னுடன் பணி புரிந்த, நான் மும்பையில் ஒரளவிற்கு வெற்றி பெற, என்னுடன் தோள் கொடுத்தவன்.

நாராயணன்: கோவையை சேர்ந்தவர்.

ராஜேந்திரன்: கோவையைச் சேர்ந்தவர், நீண்ட நாள் பழகியவரைப் போல் முதல் சந்திப்பிலிருந்து இன்று வரை................. நான் மனதளவில் மிக நெருக்கமாக உணர்பவர்.

செல்வேந்திரன்: நேரில் பழகியது சில காலமே எனினும், மனதளவில் என் அருகில் இருக்கும் நண்பனைப் போன்ற உணர்வில் எப்பொதும்...........

ரமேஷ்: திருப்பூரில் பணிபுரியும், வெயிலூருக்கு சொந்தக்காரர். இவருடனான முதல் சந்திப்பு மறக்க இயலாதது(திருப்பூரில் ஒரு restaurent-ல் இருவரும் அருகருகில் அரை மணி நேரம் ஒருவருக்கொருவர் காத்திருந்தோம்) ஊர் சுற்றுவதில் அலாதி பிரியம். இவருடனான நெல்லியம்பதி சுற்றுலா மறக்க இயலாதது.

கார்த்திகை பாண்டியன்: மதுரையம்பதியை சேர்ந்தவர். இதுவரை நேரில் சந்திக்கவில்லை. எனினும் நண்பர்கள் எனும் நினைவில் உடனே வருபவர்.


சதீஷ்குமார்: இப்போது பெங்களூரில் வாசம். நான் இவனை நினைக்கும் போதெல்லாம், எனக்கு நினைவுக்கு வருவது, கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்புதான். எவ்வளவு நாட்கள் பார்க்காமல் பேசாமல் இருந்தாலும், மீண்டும் பார்க்கும் போது துளி கூட பழைய நாட்களைப் பற்றி பேசாமல், விட்ட இடத்தில் தொடர்பவன்.

நண்பர்கள் என்ற உடன் என் நினைவில் வந்தவர்கள் இவர்கள்.  இன்னும் சில நட்புகளைப் பற்றி வரும் நாட்களில்..........

திங்கள், 10 ஜனவரி, 2011

அனிச்சை(ச் வருமா) செயல்!!!

நேற்றைய இரவில், 
ஒற்றையடி பாதையில், 
எதிர் வரும் லாரியை over take செய்து,
எனது சமிக்ஞையையும் மதிக்காமல், 
தாண்டி சென்ற நல்லவரை, 
வேசி மகன் எனப், 
பொருள் பட கத்தியபின் உணர்ந்தேன், 
பின்னிருக்கையில் மகனும் மனைவியும், 
நினைவை விட்டக லமறுக்கிற து, 
இன்னமும்.#ஆற்றாமை.

வியாழன், 9 டிசம்பர், 2010

ஒரு வெளம்பரம்!!! ஹி ஹி ஹி!!

இந்த விளம்பரத்த பத்தின உங்களோட கருத்துக்களை என்னோட பகிர்ந்துகொள்ளுங்களேன்!

http://www.youtube.com/watch?v=Z70DtmkeOLM

செவ்வாய், 19 அக்டோபர், 2010

வேலை வாய்ப்பு- சந்தைப் படுத்துதல் துறையில்-திண்டிவனம்

ஹெர்பாலயாஸ் ராடி சேஃப் நிறுவனத்தின் திண்டிவனம்- விநியோகஸ்தருக்கு விற்பனை/சந்தைப் படுத்துதல் துறையில் ஆட்கள் தேவை.

http://www.herbalayasradisafe.com/


தகுதி:

1.  ஏதேனும் ஒரு பட்ட படிப்பு.
2.  இரு சக்கர வாகனம்(செல்லத்தக்க ஓட்டுனர் உரிமத்துடன்).
3.  மொபைல் அல்லது கணிணி உதிரிப் பொருள்கள் சார்ந்த விற்பனை முன்         அனுபவம்.

திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை சேர்ந்திருத்தல் நலம்.

கிராமப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை.

விற்பனைத் துறையில் விருப்பமுள்ள பெண்களுக்கு முன்னுரிமை.


சம்பளம் தகுதியைப் பொறுத்து.(குறைந்தது ஐந்தாயிரத்திலிருந்து...... )


விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 31க்குள் தங்களது முழுவிவரக்குறிப்பினை shivanss@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.

மெயில் அனுப்பும் போது subject:ல் Resume-Radisafe என்று மறக்காமல் குறிப்பிடவும்.

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இலக்கியம்னா என்னா- ஒரு சந்தேகம்-ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகனோட இணைய தளத்த ஓரிரவில் படித்ததின் விளைவால் சில சந்தேகங்கள் :
 

இலக்கியம் என்றால் என்ன? அப்ப நா  படிக்கறதெல்லாம்  இலக்கியம் இல்லியா? எனக்கு தமிழ்ல அச்சடிசிருக்கிற எதுவும் எந்த புத்தகமும் ஒரு பத்து பக்கத்த தாண்டி படிக்க முடிஞ்சா அது புத்தகம். இல்லன்னா அது குப்பை.

ஆனா இப்போ கொஞ்ச நாளா இணையத்துல நடக்குற விவாதங்களை பார்த்தா, நான் படிச்ச எதுவுமே இலக்கியம் இல்லன்னு தோணுது.

ரெண்டு மூணு வார்த்தைகளை ஜெயமோகன் தளத்துல பார்த்தேன். வணிக இலக்கியம், சிறுவர் இலக்கியம். இந்த மாதிரி, என்னோட கேள்வி என்னன்னா, ஒரு சராசரி தமிழ் படிக்க தெரிஞ்ச வார, மாத, இதழ் மற்றும் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி, சுப்ரமணிய சிவா, நாஞ்சில் நாடன், எஸ்.ராமக்ரிஷ்ணன், ஜெயமோகன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, லட்சுமி, திலகவதி, ஜெயந்தி, ரமணி சந்திரன்,ராஜேந்திரா குமார், ராஜேஷ்குமார், தமிழ்வாணன் இந்த மாதிரி கலந்து கட்டி படிக்கிற வாசகரெல்லாம், இலக்கிய வாசகர் இல்லியா?


ஜெயமோகன் தளத்துல நான் படிச்சு புரிஞ்சுகிட்டது, அவரவர் பார்வையில் ஒரு அளவு கோளோட இருக்காங்க. இதுதான் இலக்கியம் இது இலக்கியம் இல்லன்னு.

அப்போ இலக்கியம்-க்ங்கரதுக்கு ஏதாவது வரைமுறை இருக்கா?

அதோட அளவு கோள் என்ன?

எப்பிடி படிக்கும்போதோ/படிக்கறதுக்கு முன்னாடியோ ஒரு புத்தகம் இலக்கிய புத்தகமா இல்லியான்னு தெரிஞ்சுக்கறது?

ஒரு எழுத்தாளரோட படைப்புகளை எப்பிடி ஒரு வரைமுறைக்கு கொண்டு வர்றது. அது இலக்கிய படைப்பா? இல்லியான்னு?

யாரவது இதுக்கு ஒரு விளக்கம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

சனி, 10 ஜூலை, 2010

நிலவொன்று கண்டேன் என் ஜன்னலில்!!

வெகு நாட்களுக்கு பிறகு, நேற்றைய இரவு  தூக்கமில்லா இரவாகிப்போனது. அரைப் பாக்கெட் வெண்குழல் வத்தியுடன் மொட்டை மாடியேறி நிலவு தேடி கண்கள் வட்டமிட்டது. பிறகுதான் தெரிந்தது  நாளை அமாவாசையென்று.


என் தாத்தா அடிக்கடி சொல்லுவார். எப்போதும் விழிப்புடன் இருந்தால், வாழ்வில் ஒரு கதவு மூடினாலும் மறு கதவு கண்ணுக்கு தெரியுமென்று.

 நேற்றைக்கு ஒரு கதவு மூடும்போலத் தெரிந்தது. அரைமணி நேரம் அதன் ஆழ அகலங்களை யோசித்துக்கொண்டிருந்தேன். அப்போது வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மறு கதவின் திறவுகோலை என் கண்ணுக்கு காட்டியது.

 வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என்ற பாடலின் அர்த்தம் எனக்கு ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அர்த்தத்தை தரக்கூடியது. இந்த முறை இவ்விதம்.
 

 சில வருடங்களுக்கு முன் படித்த ஒரு தினமணி தலையங்கம் நினைவுக்கு வந்தது.

’ மாற்றம் ஒன்றே மாறாதது’

திங்கள், 11 ஜனவரி, 2010

உதவி வேண்டி.....

அன்பின் தோழமைக்கு,

நலம்.நலமே விழைவு.

என் சொந்த ஊரில் எட்டாம் வகுப்பு வரை இருக்கும் ஒரு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கணிப்பொறி மற்றும் வலையுலகம் பற்றிய ஒரு அறிமுக வகுப்பு எடுக்கலாம்/கொடுக்கலாம் என் அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு முயற்சியில் இறங்கியுள்ளோம். அதற்கு ஏதேனும் நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறைகள் உள்ளதா?

உதாரணத்திற்கு: அதிகம் ஆங்கில பயிற்சி இல்லாத/அதிக வெளிஉலகப் பழக்கம் இல்லாத, ஒரு பின் தங்கிய கிராமப் புற மாணவர்களுக்கு எந்த வகையில் கொண்டு சேர்ப்பது என்பது பற்றிய உதாரணங்கள்.

இப்போதைக்கு நாங்கள் இதை ஒரு நாள் பயிற்சியாக முடிவு செய்துள்ளோம். தேவையை பொறுத்து அதிகப் படுத்திக்கொள்ளலாம் என முடிவு.

தங்கள் வசம் இதற்கு ஏதேனும் material இருந்தால் கொடுத்துதவவும். இதில் வேறு ஏதேனும் யோசனைகள் இருந்தாலும் கொடுத்துதவும்.

என்றென்றும் அன்புடன்,

சிவக்குமரன்

டிஸ்கி:வழக்கம்போல் உதாசீனப் படுத்தி  செல்பவர்களுக்கும்,  ஏதும்  பதில்  விட்டு  செல்பவர்களுக்கும் முன் கூட்டிய நன்றிகள் பல.

புதன், 6 ஜனவரி, 2010

இந்தியர்களின் நேரக்கலாச்சாரம் பற்றிய ஒரு பார்வை

சமீபத்தில் எனது மெயிலில் வந்த ஒரு தகவல்.

இந்தியர்களின் நேரக்கலாச்சாரத்தைப் பற்றிய ஒரு பன்னாட்டு இந்தியரின் பார்வை.

நம்மில் எத்தனை பேர் வாக்களித்த நேரத்துக்கு சென்றடையவேண்டும் என்று நினைக்கிறோம். நம்மில் பலர்  வாக்களிக்கும்போதே,'ஒரு பதினோரு பன்னிரண்டு மணிக்கா வரேன்',என்றுதான் சொல்கிறோம்.பதினொரு மணிக்கும் பன்னிரண்டு மணிக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள்.

மற்றொன்று,'குறித்த நேரத்துக்கு செல்ல முடியாவிட்டாலும் அதைப் பற்றி பெரும்பாலானோர் கவலைப் படுவதில்லை. என்னால் இதை தமிழில் மொழி பெயர்க்க முடியவில்லை. தெரிந்தவர்கள் மொழி பெயர்த்தால் உதவியா இருக்கும்.


"I've already spent more time on this than this deal is worth to me."

That's what a prospective business partner said to me, complaining about the 45 minutes we had spent in a meeting together.

I was taken aback. I had just flown most of the previous 20 hours (from Bangalore to Chennai to Frankfurt then onward to Stockholm before taking my final transfer to get to Gothenburg, Sweden) to get to the meeting.

I had merely asked him to help me understand why I should pay $100,000 to represent his company in India (but that's another story). While I did manage to keep my cool that day, it brought home to me how direct people can be in a business setting.

Having worked most of my adult life in the U.S. - most of that in California's laid back Silicon Valley - I was used to plain speaking. However in the year I had been back in India before the Gothenburg trip, I had clearly lost the habit of being direct. I had acquired a more fluid sense of both time and speech.
The move to India opened my eyes to the way things are done in the Valley, sort of like watching an unflattering video of myself at a stag party.

While working in San Jose, I had never quite noticed how rude we were when we failed to return voice mails or in moved meetings at the last minute, even when people had flown in from overseas to attend them.

This was in stark contrast to Japan where a great deal of my business was coming from in the first years back in India. In my first business meeting in Japan, two managers from a $40 billion firm spent two hours with me (the marketing guy from a $5 million dollar Indian company) to understand why we were charging "so much more" than the competition.

Of course, many people have apocryphal stories of negotiating in Japan or China where indirection and opacity seem the norm. In one, two-day session I found out only at dinner that the guy that seemed to spend most his time taking pictures was actually the key decision maker and the two people we hadn't been introduced to were competitors
“The move to India opened my eyes to the way things are done in the Valley, sort of like watching an unflattering video of myself at a stag party.”
India, in many ways, straddles these two very different business cultures. The almost unquestioning acceptance of seniority, the acute awareness of hierarchy and near-obsession with not losing face that Japanese businesses are known for can be found in Indian companies as well.

Still, the Japanese put much more importance on time schedules. In India you could never imagine a client instructing you to take the 7:52 express train to the transfer station where the client would join you at 8:24 to reach their office at 8:50 - the requisite ten minutes before your 9:00 a.m. meeting. I regularly get detailed directions like this from our Japanese clients.

In India "Let's meet at 11" is generally a suggestion. It means "We should connect around that time and it's likely that I'll call you at 10:45 to tell you I am stuck in traffic and will be late by 30 minutes or more."

This has been the biggest lesson for me about doing business in India. Time and communication (and even space if you try to drive here) take on a sponge-like quality here.

In my unending naiveté, I initially believed that the inability to stick to schedules was the fault of the sales and marketing folks or overburdened C-level executives. That illusion didn't last long. I started to understand what really happens after sitting through a weekly customer call with my engineering team.

"How can the deliverable slip by a month when we were on schedule last week?" the customer asked. I could visualize the apoplectic look on the client's face even without a webcam.

Our engineers, I found out, were well aware of the delay that was accumulating daily but had redoubled their efforts to crack the problem on time. They had been confident they'd solve the problem and recover the lost month and wanted to avoid causing anxiety to the poor client.

The most positive way I have found to look at this delivery dilemma is to figure we Indians are eternally optimistic. We are optimistic to a fault. We are certain that we will clutch victory from the jaws of defeat much like a Bollywood hero gets his girl at the end of the movie, just as the police drag away the dastardly villain. When we say the report will be done this evening or we'll get there in 15 minutes, we believe it - the laws of physics be damned!

As with all understanding about India, there may be exceptions. You might meet an ex-military type or maybe a Bengali or Tamil gentleman who will confound you by always being on time. Worse still, they might expect you to be on time like the Japanese or direct and brash like the Valley types.
Fortunately India is so vast that such encounters are likely to be rare.

—K. Srikrishna is the founder and minister for culture and finance for Zebu Communications, a Bangalore-based marketing-strategy startup.

நன்றி- தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் 
Thanks- the wall street journal

சாலை விபத்துகளும் சுப்ரீம் கோர்ட்டும்





ஆகவே நண்பர்களே,
சாலை விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவரை எப்.ஐ.ஆர் கொண்டுவர சொல்லி கட்டாயப்படுத்தாமல்  மருத்துவமனை நிர்வாகம் கட்டாயமாக உடனடி முதலுதவி கொடுத்தேயாகவேண்டும் என்றும் காயம்பட்டவரை கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்தவரை காவல்துறை மற்றும் இதரதுறைகள் அனாவசியமாக அலைகழிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
அதாவது உச்சநீதிமன்ற வழக்கு எண்: Appeal(civil) 919 of 2007ல் 23.02.2007 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் ஆணையின்படி, விபத்துகளில் குறிப்பாக சாலை விபத்துகளில் காயம்பட்டவர்கள் அவர்கள் கொண்டுவரப்ப்படும் மருத்துவமனை, அது எந்தவிதமான மருத்துவமனையாக இருப்பினும் அம்மருத்துவமனையாகப்பட்டது காய்ம்பட்டவருக்கு கட்டாயமாக உடனடி முதலுதவி தரவேண்டும். அவர் உடல்நிலை சமநிலைப்படுத்தப்பட்டு தேவைப்படுமாயின் அதிக வசதிகள் உள்ள சிறந்த மருத்துவமனை அல்லது அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படவேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தாம் செய்த மருத்துவத்திற்கான கட்டணம் மற்றும் காவல்துறை சம்பிரதாயங்களை எதிர்பார்க்கலாம்!
சாலைவிபத்தில் அல்லது வேறு விபத்துகளில் காயம்படுபவரை மருத்துவமனைக்கு அழைத்து/கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? எனில் தயக்கமின்றி அந்த நற்செயலில் ஈடுபடுங்கள். காயம்பட்டவரை மருத்துமனைக்கு இட்டுச் செல்வதோடு உங்கள் பொறுப்பு முடிந்து போகிறது! காவல்துறைக்கு தகவல் அறிவிப்பதும், முதலுதவி கொடுப்பதும் மருத்துவமனையின் கடமை என்று சொல்கிறது உச்சநீதிமன்ற ஆணை!

மேற்படி உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இந்த அடிப்படை உரிமை குறித்த தகவலை தயவு செய்து உங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். அதன்மூலம் தக்க நேரத்தில் பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் தேவைப்படுவோருக்கு நாம் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை எல்லோரும் அறிந்துகொள்வர்!

தயவுசெய்து இந்த செய்தியை முடிந்த அளவு எவ்வளவு பேருக்கு தெரியப்படுத்தமுடியுமோ, தெரிவியுங்கள்!!

நன்றி - க. தங்கமணி பிரபு

புதன், 30 டிசம்பர், 2009

ஸ்டேட்டஸ் மெஸ்சேஜ்- நபிகள் நாயகம்

இன்று பார்த்த ஸ்டேட்டஸ் மெஸ்சேஜ்- களில் என்னைக் கவர்ந்தது!!

பரிசலின் ஸ்டேட்டஸ் மெஸ்சேஜ்,"தனக்குத் தானே பெருமை பேசுபவர்களை அல்லா ஏற்பதில்லை" - நபிகள் நாயகம்

:---நன்றி  பரிசல்!! 

வெள்ளி, 25 டிசம்பர், 2009

சுய கழிவிரக்கம் (வார்த்தை சரியா?)




நான் கொஞ்சம் கொஞ்சமாய் மன நோய்க்கு உள்ளாகிறோனோ என்ற சந்தேகம் கொஞ்ச நாட்களாய் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.


சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய பகுதியின்   பொறுப்பை என் நிறுவனத்தில் ஏற்றுக்கொள்ளும்போதே தெரிந்த விஷயம்தான். வேலைப்பளு  மிக  அதிகம்  என. வாடிக்கையாளருடன் நேரடிதொடர்பில் இருப்பதால் தொடர்ந்த தொலைபேசி அழைப்புகள் பிரச்சினைகள், என் நிறுவன உள்வட்ட குழுவில் சரியான தொடர்பில்லாமை, ஒத்துழைப்பில் பிரச்சினை. பணம் கொடுத்த வாடிக்கையாளரின் முறையற்ற பேச்சு என மூளைக்கு யோசிக்க அவகாசமில்லாத ஓட்டம் . தூக்கம்  தொலைத்த  நாட்கள்  . தூக்கமில்லாததால்       மங்கிய   முகம். ஓவென  அழத்தோன்றும்  மனது .  நான் எதை   நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். நான் செல்லும்  பாதை  சரியா? சிவா,  கொஞ்சம் நின்னு  யோசிடா.  சீக்கிரம்  சரி  பண்ணிக்கடா. இல்லன்னா  பைத்தியமயிடுவடா. என்னோட  பொறுமை  பத்து  நிமிஷத்துக்கு  மேல  தங்க  மாட்டேங்குது. என் நண்பர்கள் கூட கொஞ்சம் நேரமாவது சிரிச்சி பேசி ரொம்ப நாளாயிடுச்சி.

இந்த பிரச்சினைகெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன. நான் எந்த இடத்துல தப்பு பண்றேன். ஒருவேளை அடுத்தவங்க பிரச்சினைய நான் புரிஞ்சிக்க மாட்டேங்குறேனா?  இல்ல என்னோட எதிர்பார்ப்பு  ரொம்ப அதிகமா?  மூணாவது மனுஷனா என்னோட பிரச்சினைய யோசிச்சா தீர்வு கிடைக்கும்னு புரியுது. ஆனா யோசிக்க முடியாம மூளை ரொம்ப குழம்பி கிடக்கு. பறவைப் பார்வையில என்னைப் பார்க்கணும்னு முயற்சி பண்ணி பண்ணி தோத்துத்தான் போறன்.

யார் இருந்தாலும் இல்லாட்டியும் வேலை நடந்துக்கிட்டுதான் இருக்கும்னு நான் அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா ஒரு வேலைய ஆரம்பிச்சுட்டு நாம  இல்லாம இருந்தா இந்த வேலை முடியாதுன்னு நான் அடிக்கடி நினைச்சுக்கிட்டு இருக்கேன்.  இது அடுத்தவங்க மேல எனக்கு இருக்குற அவநம்பிக்கையா இல்ல வேற எதுவும் காரணமா? இது கூடவே இன்னும் ஒண்ணும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன், முன்னாடி அனுபவம் ஒருத்தனை நம்பாதேன்னுசொல்லுது. ஆனா வேற வழியில்லாம அவனையே மறுபடியும் நம்பி மண்ணை கவ்வ வேண்டியதா இருக்கு. நான் ஏன், மறுபடியும் அவனையே நம்பறேன்? காரணம் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது.

இந்தமாதிரி பைத்தியகாரத்தனமான சிந்தனையோடவே இருந்தா நான் என்ன ஆவப்போறேன்னு தெரியலையே?

வியாழன், 19 நவம்பர், 2009

விவேகானந்தரின் பொன்மொழிகள்


சமீபத்தில் எங்கள் நிறுவன நடைமுறைகளில், நிர்வாகம்  சில மாற்றங்களை  செய்தது. இதன் முக்கிய நோக்கம்,மனிதவளத்தை முறையாகவும் வெளிப்படையாகவும் பயன்படுத்துவது.

இதை அறிமுகம் செய்தவுடன் சில வித்தியாசமான விமர்சனங்கள் வந்தது.

அதில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், எந்த விதமான விமர்சனமும் வைக்காமல் கீழே இருக்கும் விவேகானந்தரின் பொன்மொழியை மட்டும் ஈ-மெயிலில் அனைவருக்கும் அனுப்பினார். நான் இன்னமும் இதற்கான அடிப்படைக் காரணத்தை தேடி/அலசிக் கொண்டிருக்கிறேன்.

இதற்கு தமிழ் அர்த்தம் தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்களேன்?
  • When I Asked God for Strength
    He Gave Me Difficult Situations to Face
  • When I asked God for intelligence
    He Gave Me Puzzles to Solve.
  • When I Asked God for Happiness
    He Showed Me Some Unhappy People
  • When I Asked God for Wealth
    He Showed Me How to Work Hard
  • When I Asked God for Favors
    He Showed Me Opportunities to Work Hard
  • When I Asked God for Peace
    He Showed Me How to Help Others
  • God Gave Me Nothing I Wanted
    He Gave Me Everything I Needed

புதன், 14 அக்டோபர், 2009

ஒரு குறும்படம்- உங்களின் பார்வைக்கு



இப்படியும் சிலர்,

வலையில் உலவியபோது கிடைத்த குறும்படம் உங்களின் பார்வைக்கு.

எனக்கு கருத்து ஏதும் சொல்ல தோன்றவில்லை.

இதைப் பற்றிய உங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்.

திங்கள், 21 செப்டம்பர், 2009

உன்னைப்போல் ஒருவன்- விமர்சனம்

பொதுவாய் கமல் படம் என்றால் நான் படம் பார்ப்பதற்கு முன் விமர்சனங்கள் ஏதும் படிப்பதில்லை. அப்படிதான் இந்த படத்திற்கும் விமர்சனம் படிக்காமல் படம் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது சீக்கிரம் முடிஞ்சுபோச்சே என்றுதான்.

இதோ எனக்கு பிடித்த சில விமர்சனங்கள்.

பரிசல்காரன்

குசும்பன்

ஆதி

கார்த்தி


கேபிள் சங்கர்

வியாழன், 17 செப்டம்பர், 2009

என்னை பாதித்த ஒரு மரணம்

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வரவிற்கு முன், வானொலிதான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. காலை 5.45 மணிக்கு என் தந்தையினால் துவக்கப்படும் வானொலி, இரவு 10.30 மணி புதுவை வானொலி நேயர் விருப்பம் வரை தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும்.

அதில் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளான காலை வயலும் வாழ்வும், விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சிகள், இரவு நாடகங்கள், நாடக விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடிப்பது-எப்போதுமே இன்று ஒரு தகவல்தான்.

காலை 7.30- ல் இருந்தே வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல், வானொலியை கவனித்துக் கொண்டிருப்போம். அப்போது என் வீட்டில் கைத்தறி மூலம் நெசவு செய்து கொண்டிருந்தோம். என் தாத்தா நெசவு நெய்து கொண்டிருந்தாலும் பத்து நிமிடங்கள் அதை நிறுத்தி விட்டு (தட்டக் தட்டக் என்று ஒரு இடைவிடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்) இன்று ஒரு தகவல் கேட்டு விட்டு மீண்டும் நெசவு நெய்ய ஆரம்பிப்பார்.

என் வானொலி நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் ' தென்கச்சி கோ சுவாமிநாதன்' அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிக்க வருத்தமடைந்தேன்.

அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

என்னை பாதித்த ஒரு வானொலி ஆளுமை மறைந்ததில், என் துயரத்தை விவரிக்க வார்த்தைகளில்லை.

புதன், 9 செப்டம்பர், 2009

பொது மக்கள்,காவல்துறை மற்றும் ஒரு பேருந்து.

இரண்டு நாட்களுக்கு முன்பு,சொந்த/அலுவலக வேலையாக புதுவை மற்றும் விழுப்புரம் சென்றிருந்தேன். அங்கு நடந்த ஒரு சம்பவம்.

காலை எட்டரை மணிக்கு ராதாபுரம் என்னும் ஊரிலிருந்து புதுவைக்கு செல்ல பேருந்தில் ஏறினேன். அந்த ஊரில் இருந்து புதுவைக்கு அதிக பேருந்து வசதி இல்லை. 30 கி.மீ. தூரத்தில் உள்ள புதுவை தொழிற்பேட்டை வேலைக்கு செல்வதற்காக முண்டியடித்து ஏறினேன். என்னுடைய சுமாரான கணக்குப்படியே, பேருந்தினுள் குறைந்த பட்சம் தொண்ணூறு பேராவது இருப்பார்கள். இது இல்லாமல் பேருந்தின் மாடியிலும் ஆட்கள்.

பேருந்து புதுவையை நெருங்க நெருங்க, எனக்கு மூச்சு விடுதலே சிரமம் என்ற நிலையில் ஒரு நிகழ்ச்சி.

ஒரு நான்கு முனை சாலையில் ஒரு விபத்து. விபத்தை முன்னிட்டு அனைத்து புறங்களிலும் போக்குவரத்தை நிறுத்தினர் போக்குவரத்து போலீசார். நான் வந்த பேருந்தை நிறுத்த சொல்லி கை காட்ட, இந்த பேருந்து ஓட்டுனர் நிறுத்தாமல் செல்ல, இரண்டு கி .மீ துரத்தி வந்து மறித்து நிறுத்தினார் போலீஸ்காரர்.

பின் அவர்களுக்குள் பலத்த வாக்குவாதம். வாக்குவாதம் முற்றி ஓட்டுனரையும், நடத்துனரையும் காவல் நிலையம் அழைத்து செல்ல ஆயத்தமானபோது பேருந்தினுள் இருந்தவர்கள் ஒன்று கூடி காவல்துறையிடம், எங்களை இறக்கிவிட்டு விட்டு நீங்கள் அவர்களை அழைத்து செல்லுங்கள் என வேண்டுகோள் வைக்க, காவல்துறையினர் உதாசீனப் படுத்திவிட்டு அழைத்து சென்றனர்.

(அந்த பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிற்பேட்டை தினக் கூலியினர், அருகில் வேறு பேருந்து நிறுத்தமும் இல்லை,அங்கிருந்து புதுவைக்கு பத்து கி.மீ )

அதன் பின் நடந்தது,?

தினசரி அந்த பேருந்தில் வருபவர்கள் ஒன்று கூடி ஏதோ பேசினர்.

வேறு ஒருவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். பேருந்தை சற்று நகர்த்தி சாலையின் குறுக்காக, வேறு வாகனம் எந்த பக்கமும் செல்ல முடியாதபடி நிறுத்தினார். அதற்கு பிறகு அவர்கள் செய்த காரியம், எனக்கு திகைப்பு, ஆச்சரியம், அதிர்ச்சி என்று சொல்ல முடியாத உணர்ச்சிகளை அளித்தது.

பேருந்தின் முன் சக்கரத்தை கழட்டி, அருகிலிருந்த புதரில் மறைத்து வைத்து விட்டனர். பத்து நிமிடத்தில் இரண்டு பக்கமும் வாகனங்கள் பெருகி ஒலிப்பான்கள் அலற ஆரம்பித்து விட்டன. மேலும் அது முதல்வர் வரும் வழியாம்.

காவல்துறையினர் வந்து பேருந்தை எடுக்க முற்பட்டபோது, சக்கரத்தை கேட்டால், பேருந்தில் இருந்த ஒரு நல்லவரும் வாயை திறக்கவில்லை.

பிறகென்ன பேச்சுவார்த்தைதான்.

பேச்சுவார்த்தையின் முடிவில், ஓட்டுனரையும் நடத்துனரையும் அழைத்துவந்த பிறகுதான் சக்கரத்தை எடுத்து கொடுத்தனர்.

இதில் யாரை சொல்லி நோவது?

குறிப்பு: பிறகு நான் விசாரித்து தெரிந்து கொண்டது. அந்த பகுதியில் பேருந்து வசதி மக்கள் தொகைக்கேற்ப இல்லை. கிட்ட தட்ட அனைத்துப் பேருந்துகளும் இது போன்ற நிலையில் தான் வரும்.

குறிப்பு 1: இதே போன்றதொரு நிகழ்வு சில நாட்களுக்கு முன்பு புதுவையின் வேறொரு பகுதியில் நடந்துள்ளது. அதை அடியொற்றித்தான் இந்த யோசனை, இந்த பேருந்தில் இருந்த மக்களுக்கும் வந்துள்ளது.

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

பிரியாணி இல்லை... பணம் இல்லை... விழுந்தது ஓட்டு

பிரியாணி இல்லை... பணம் இல்லை... விழுந்தது ஓட்டு : 

ஊட்டி குருகுலம் பள்ளியில் தான் இது...


---------------------------------------------------------------


சட்டசபை, லோக்சபா தேர்தலைப் போல், ஊட்டி குருகுலம் பள்ளியில் மாணவர் பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது, வியப்பளித்தது.ஊட்டி தூனேரியில் உள்ள அகலார் குருகுலம் பள்ளியில், மாணவர் பேரவைத் தலைவர், துணை தலைவருக்கான தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு, இரு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

தலைவருக்கு, ஷாலினி தேவி, பிரீத்தி, வினோதினி, சிந்து, ஆஷா பிரியா, பேரவைத் துணை தலைவருக்கு அனுஷா, விக்னேஷ், நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தனர்; சிந்து வாபஸ் பெற்றதால், களத்தில் 6 பேர் போட்டியிட்டனர்.நேற்று முன்தினம் காலை நடத்தப்பட்ட கடவுள் வாழ்த்து நேரத்தில், போட்டியிடுபவர்கள், தங்களின் வாக்குறுதிகளை மாணவ, மாணவிகளிடம் தெரிவித்தனர்.

4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், வாக்களிக்க அனுமதிக்கப் பட்டனர். மதியம் 12.30 மணியளவில் ஓட்டுப்பதிவு துவங்கியது. சட்டசபை, லோக்சபா தேர்தல் விதிமுறைகள், இப்பள்ளியில் நடத்தப்பட்ட ஓட்டுப்பதிவிலும் கடைபிடிக்கப் பட்டது.மாணவ, மாணவிகள் வரிசையாக நின்று, தங்களின் பள்ளி அடையாள அட்டையை காண்பித்து, கையெழுத்திட்டு, கையில் "மை' வைத்துக் கொண்டு, வழங்கப்பட்ட சீட்டில் அச்சிடப்பட்டிருந்த ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, இதற்காக வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் இட்டு, தங்களின் கடமையை நிறைவேற்றினர்;

இதற்கான வழிகாட்டுதலுக்காக, மாணவி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார். வாக்காளர் களாகிய மாணவர்களின் பெயரை, பூத் ஏஜென்ட்களாக செயல்பட்ட மூன்று மாணவர்கள் சரிபார்த்தனர். மதியம் 1.15க்கு ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 2.30 மணியளவில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. தேர்தலில் போட்டியிட்ட மாணவ, மாணவிகள், அறையின் வெளியே நின்று, கணக்கெடுப்பை பார்வையிட்டனர்; 3.00 மணியளவில் முடிவு அறிவிக்கப்பட்டது.

மாணவ, மாணவிகள் 100 பேர் ஓட்டளித்த நிலையில், 51 ஓட்டுகள் பெற்று மாணவர் பேரவைத் தலைவராக ஷாலினி தேவி, 54 ஓட்டுகள் பெற்று பேரவைத் துணைத் தலைவராக அனுஷா தேர்ந்தெடுக்கப்பட்டனர்.போட்டியிட்ட பிரீத்தி, வினோதினி, ஆஷா பிரியா, விக்னேஷ் உட்பட மாணவ, மாணவிகள் அனைவரும், வெற்றி பெற்றவர்களுக்கு, தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
பள்ளி நிர்வாகி அர்ஜுனன் கூறுகையில், மாணவ, மாணவிகளின் ஆலோசனையின் படி தான், இதுபோன்ற தேர்தல் நடத்தப்பட்டது. பள்ளி நிர்வாகமே எதிர்பார்க்காத அளவில், மாணவி, மாணவிகள் தங்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தினர். தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனவர்களுக்கு, சிறப்பு பதவிகள் வழங்கப்படும்,'' என்றார்.
------------------------------------------------------------------------
நன்றி தினமலர்

வியாழன், 27 ஆகஸ்ட், 2009

அன்புள்ள அப்பா,

அன்புள்ள அப்பாவுக்கு,

எப்பிடிப்பா இருக்கீங்க. எனக்கு நெனவு தெரிஞ்சு, நான் உனக்கு எழுதற ரெண்டாவது லெட்டர்னு நெனக்கரன்ப்பா.

இன்னமும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குப்பா. அந்த லட்டர படிச்சுட்டு நீ ரெண்டு, மூணு நாளு தூங்காம இருந்தது. நம்ம ரெண்டு பேரோட வாழ்க்கையையும் அந்த லட்டருக்கு முன்/பின் பிரிச்சிக்கலாம்னு எனக்கு அடிக்கடி தோணும்.

ஆயா அடிக்கடி சொல்லுவாங்க, காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்னு. அது அப்போ எனக்கு புரியல. என்னோட கல்யாணத்துக்கு அப்புறம், என்னால நெறைய விஷயம் புரிஞ்சிக்க முடியுது.

உன்னோட செயலுக்கெல்லாம் குறைஞ்ச பட்ச நியாயம் உன்னளவில இருந்திருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியுதுப்பா.

ஆனாலும் எங்களை அக்கா கல்யாணம் வரைக்கும், உன்கூட வச்சிக்க முடியாததக்கு ஒரு நல்ல காரணம் இப்பவும் உன்னால சொல்ல முடியுமாப்பா.

நானும் அண்ணனும் ஸ்கூலுக்கு போகும்போது ,எவ்வளோ தவிச்சிருக்கோம்னு, எவ்ளோ சொன்னாலும் உன்னால புரிஞ்சிக்க முடியாதுப்பா.

இப்பவும் என் சர்டிபிகேட்லயும் அண்ணன் சர்டிபிகேட்லயும் தாத்தாவோட கைஎழுத்துதானப்பா இருக்கு.

எங்களால புரிஞ்சிக்க முடியாத விஷயம் ஒண்ணு இருக்குப்பா. அதுக்குதான் இந்த லட்டர்.

ஆரம்பத்துல நீ ஆயா மேல ரொம்ப பாசமா இருந்தன்னு, பக்கத்து வீட்டு பெருசுங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதுலாம் கேள்விப்பட்டு இருக்கன்.

ஆயா சாகும்போது நீ அதையெல்லாம் வெளிக்காட்டி நாங்க யாரும் பார்க்கவே இல்லப்பா. இன்னும் கொஞ்ச நாள்ல உன்னோட பேத்திக்கு கல்யாணம் ஆகப்போதுப்பா. இன்னமுமா நீ ..... நெனச்சி யோசிச்சிக்கிட்டு இருக்க.

எங்க எல்லாருக்கும் அடி மனச அரிச்சிக்கிட்டிருக்கிற ஒரு விஷயம், தாத்தா.

நெனச்சா கண்ணு கலங்குதுப்பா.

வேற வழியில்ல, எங்களோட வேலைக்காக/வாழ்வாதாரத்துக்காக நம்ம ஊரிலேயே இருக்க முடியல.
தாத்தாவை கூட வச்சிக்கணும்னு ஆசைப்பட்டாலும் சூழ்நிலை இடம் தரல.

ஆனா எது எப்பிடி இருந்தாலும், தாத்தா ஊருல இருக்குற முறை எங்க யாருக்குமே சந்தோசத்தை தரலங்கிரதுதான் உண்மைப்பா.

இன்னும் கொஞ்ச நாள்ல நீயும் ரிடேர்மேன்ட் வாங்கிகினு வீட்லதான் இருக்கப்போற.
அப்போவாவது தாத்தாவை கொஞ்சம் நல்லா பாத்துக்கப்பா.

என்றென்றும் அன்புடன்,

............

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை-2010

இன்னிக்கு தினமலர்ல அமைச்சர் ஆற்காடு வீராசாமி, ஒரு பொது நிகழ்ச்சியில பேசியதாக வந்த ஒரு செய்தி.

  <தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. காற்றாலைகள் மூலம் மிக அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2010 அக்டோபருக்குப் பின் மின் தட்டுப்பாடு இருக்காது.>

இவங்கல்லாம் பேசும்போது யோசிக்கவே மாட்டாங்களா? ஒரு வேளை இவருக்கு தமிழ் சரியா வராதோ?

திங்கள், 24 ஆகஸ்ட், 2009

வாருங்கள் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவோம்.


ஏணிகள் ஒருவனை உயரத்தில் ஏற்றி விடுவதற்காக உருவானவை. வாழ்க்கையிலும் ஒருவன் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், அவனுக்குச் சில ஏணிகளும் வேண்டும். அதில் அவன் ஏறவும் வேண்டும்.

-------------------------------------------------------------------------
ஏணிகளிலும் சில டாப்டென் ஏணிகள் உண்டு. அவை :

1. AIM - குறிக்கோள் :
குறிவைக்காமல், எந்த வேடனும் அம்பை விடுவதில்லை. எந்தப் பட்டாளத்து வீரனும் துப்பாக்கியை சுடுவதில்லை. எந்த டிரைவரும் போக வேண்டிய ஊரைத் தீர்மானிக்காமல் பேருந்தை எடுப்பதில்லை.
நூறு ஆண்டுகள் வாழ்ந்து சாதனைகள் பல புரிய வேண்டிய மனிதன், சந்தோஷங்கள் பலவற்றைஅனுபவிக்க வேண்டிய மனிதன் வாழ்க்கையில் தான் யாராக உருவாக வேண்டும் என்றும் குறைந்தபட்சம் எந்த அளவுக்கு உயரவேண்டும் என்றும், எந்தெந்த வயதில் எந்தெந்த நிலையை அடைய வேண்டும் என்றும் லட்சியங்களை நிர்ணயித்துக் கொள்கிறானோ, அதுவே அவனது முதல் ஏணி.

2. PRIORITY - எது முக்கியம் என்கிற உணர்வு

தனக்கான லட்சியங்களை ஒருவன் தீர்மானித்த பிறகு அவனுக்கு ஒரு பொறுப்பு வந்து விடுகிறது. தான் அன்றாடம் செய்து கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் வேலை களில் எவை தன்னை லட்சியம் நோக்கி நகர்த்தும், எவை தன்னை உயர்த்தும், எது முக்கியம், எது முக்கியமல்ல என்பது குறித்து தெளிவும், விவேகமும் வந்து விடுகிறது.
இது அவனது இரண்டாவது ஏணி.

3. PATH - பாதை

இன்று இப்படி இருக்கிறேன். நாளை அப்படி இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று யோசித்து, திட்டமிட்டு, செல்ல வேண்டிய நேரான, சீரான, சிக்கலில்லாத பாதையை, விரைவாகவும், வில்லங்கமில்லாமலும் குறிக்கோளிடம் கொண்டு சேர்க்கும் பாதையை, அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது மூன்றாவது ஏணி.

4. LOOK FAR AHEAD - தொலை நோக்கு

ஓரடி, இங்கு, இன்று எடுத்து வைத்தாலும், நூறடி தொலைவில், என்ன நடக்கிறது என்பதில் கவனம். தொலைவில் மங்கலாகத் தென்படும் தடைகளைப் பற்றியும், எதிர்ப்படக்கூடிய மேடுபள்ளங்கள் பற்றியும் இருக்க வேண்டிய எச்சரிக்கை யுணர்வு. எதிர்காலம் பற்றிய பாதுகாப்பு உணர்வு. சென்றடைய வேண்டிய தூரம் குறித்தும், சாதிக்க வேண்டிய காரியங்கள் குறித்தும் ஒரு தொலைநோக்கு.
இது நான்காவது ஏணி.

5. ENTHUSIASM - உற்சாகம்

தன் வளர்ச்சியைக் குறித்தும், வாழ்க்கையைக் குறித்தும் உண்மையான அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களுக்கும் தனது அறிவின் மீதும், ஆற்றல் மீதும் தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கும், உற்சாகத்திற்கு என்றுமே பஞ்சமில்லை.
தணியாத உற்சாகம் கொண்டவர்கள் மட்டுமே, தங்களது முழுச்சக்தியையும் தங்களது முயற்சிகளில் காண்பிக்கிறார்கள். முழு நேரத்தையும் முன்னேற்றத்துக்காகவே செலவிடுகிறார்கள். முட்டுக்கட்டைகள் முளைத்தாலும் முண்டியடித்து முன்னே செல்கிறார்கள்.
இந்த அபரிதமான உற்சாகமே அடுத்த ஏணி.

6. JOURNEY - பயணம்

வாழ்க்கை ஒரு பயணம் என்பார்கள். வெற்றுடம்போடு பிறந்த மனிதன், விதவிதமான செல்வங்களைத் தேடுவதும், சுகங்களை நாடுவதும், வெற்றிகளைக் குவிப்பதும், லட்சியங்களைப் பிடிப்பதும்…….. இவைதானே இந்தப் பயணத்தின் நோக்கம்.
அந்த வெற்றிகளை நோக்கி, இலட்சியங்களை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஓரடியாவது நகர்ந்தால்தானே அவன் முன்னேறுகிறான் என்று அர்த்தம். தேங்குவதும், பின்வாங்குவதும், திசை மாறுவதும் பயணம் பாழாகிறது என்பதற்கான அடையாளங்கள்.
அயராத பயணம் ஆறாவது ஏணி.

7. UPDATE THE SKILLS - திறன் மேம்பாடு

தகுதியும் திறமைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. தன்னைச் சுற்றிலும், விரைந்து வளர்கின்ற விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி; பெருகிவரும் போட்டிகள்; அடையவேண்டிய லட்சியத்தின் அளவு; குறுகிய காலம்; இவைகளை, வளர விரும்பும் ஒரு மனிதனுக்கு, அவனது திறமைகளையும், தகுதிகளையும் அன்றாடம் அதிகரித்துக் கொள்ளவேண்டிய அவசியத்தையும், புதுப்பித்துக் கொள்ள வேண்டிய, கட்டாயத்தையும் வலியுறுத்துகின்றன.
இது ஏழாவது ஏணி.

8. INTER PERSONAL SKILLS - மனித உறவுகளில் திறமை

வெற்றிக்குக் குறுக்கே வரும் தடைகளில் பெரும்பாலானவை, மனிதர்களால் வருவதே. அன்றாட வாழ்வில், ஒவ்வொருவரும், பலதரப்பட்ட மனிதர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருக்கிறது. பிரச்சனைகளை, சம்பந்தப்பட்ட மனிதர்களைப் பொறுத்து, நெளிவு சுளிவுகளோடு, நேரத்திற்குத் தகுந்த படி சாமர்த்தியமாக சமாளித்து காரியம் சாதிக்கும் திறமை, முன்னேறவிரும்பும் மனிதனுக்கு இருக்க வேண்டிய ஒரு முக்கியத் திறமை.
தட்டிக்கொடுத்தும், குட்டுக் கொடுத்தும், விட்டுப் பிடித்தும், சிரித்துப் பழகியும், சிடுமுகம் காட்டியும், மனிதர்களை ஆளும் திறனே எட்டாவது ஏணி.

9. CONSCIOUS ABOUT TIME - நேர உணர்வு

சூரியன் உதிக்கிறான். மறைகிறான். ஒருநாள் போகிறது. மனிதனின் ஆயுளில் ஒருநாள் குறைகிறது. அந்த ஒருநாள், அவனை எந்த விதத்திலும் உயர்த்தி யிருக்காவிட்டால், அந்த ஒருநாளிடம் இவன் தோற்றுப் போனதாக அர்த்தம். இப்படி தினமும் தோற்றுக் கொண்டிருப்பவனின் வாழ்வு வெற்றியைக் காணாமலே முடிகிறது.
கடந்துபோன, ஒரு மணி நேரம், ஒரு நாள், ஒரு வாரம் , ஒரு மாதம், ஒரு ஆண்டு என் வளர்ச்சிக்கு உதவியதா இல்லையா? என்கிறகேள்வியை, நேர உணர்வு உள்ளவன் மட்டுமே கேட்க முடியும். அப்படிக் கேட்பவன் மட்டுமே வாழ்வில் உயர முடியும்.
அந்த உணர்வுதான் அடுத்த ஏணி.

10. EFFORTS - முயற்சிகள்

ஏனோதானோ என்றில்லாத, கடுமையான உழைப்பை உள்ளடக்கிய முயற்சிகள். எந்தத் தடை வந்தாலும், தயக்கத்தையோ, மயக்கத்தையோ தந்துவிடாமல், புதிய சக்தியோடும், புதிய யுக்தியோடும் புறப்படுகின்றதீவிர முயற்சிகள். தொடர்ந்த முயற்சிகள். இவைதான் வெற்றிக்கு உத்திரவாதம்.
இது பத்தாவது ஏணி.

இந்த டாப்டென் ஏணிகளை எப்படி இதயத்தில் எப்போதும் இருத்திக் கொள்வது?
ஆப்பிள் ஜுஸ் சாப்பிடுங்கள். போதும் என்ன விழிக்கிறீர்கள்? இந்த ஏணிகளின் முதல் எழுத்துக்களைப் பாருங்கள்.

Aim
Priority
Path
Look for ahead
Enthusiasm

Journey
Update the skills
Interpersonal skills
Conscious about time
Efforts

-----------------------------------------------------------------------------------------------------------
சமீபத்தில் எனக்கு வந்த ஒரு மெயிலில் நான் ரசித்தது.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

உன்னை விட்டு நெடுந்தொலைவு.....



உன்னை விட்டு நெடுந்தொலைவு
உள்ளுக்குள்ளே உன் நினைவு
நள்ளிரவு விழித்திருப்பேன்
நட்சத்திரம் பார்த்திருப்பேன்
நீ சிரிக்கும் நொடியில் எந்தன்
நெஞ்சினிலே பூ மலரும்
விட்டு வரும் வேலையல்ல
கடமை இது! கண்ணே!
முடித்து விட்டு திரும்பும் வரை
முத்தங்களை வைத்திரு நீ!
---------------------------------------------------------
இது கார்கில் போர் நடந்த சமயம் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்த ஒரு கவிதை.

என் மகனை பிரிந்திருக்கும் இந்த ஒரு வாரத்தில் என் நினைவில் நித்தமும் நிழலாடும் கவிதை இது.

இதன் முழு கவிதை வரிகளும் என் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் யாரேனும் சொல்ல இயலுமா?

வியாழன், 20 ஆகஸ்ட், 2009

மும்பை ரயிலும் நானும்......பின்னே எண்ட அவசரமும்



ஆட்டோ , ஆட்டோ,

எங்க சார் போவணும்,

ரயில்வே ஸ்டேஷன் போவணும்,

100 ரூவா குடு சார்,

தர்றேன் வண்டி எடுங்க , அவசரமா போவணும், 3.50 மும்பை ரயில புடிக்கணும்,

டேய் செந்திலு டேய்

சார் உங்களைத்தான் சார் கூப்பிடறாங்க.

யாருங்க ,

எங்கடா போற

நான் அவசரமா போறன்டா , வந்து சொல்றேன், நீங்க வண்டி எடுங்க.

3.50 க்குதான சார், மணி 3.35 தான் சார் ஆவுது. நம்ம வண்டி ஜெட் மாதிரி சார். தொட்டா பறக்கும்.

யப்பா நீ ரோட்டுலயே வண்டி ஓட்டு. பேச்ச கொற, வண்டி எடு
...........................................................................
'மாலினி' விழுப்புரம் சரியான நேரத்துக்கு போய்டுவானாடி!

'ஏண்டி இப்பிடி படுத்தற, அதான் வண்டி கரெக்ட் டைம் தான்னு சொல்றாங்கல்ல, ஒரு இடமா ஒக்காரு'.
...........................................................................
ஏம்ப்பா வண்டி ஜெட் மாதிரின்னு சொன்ன, நீ போறதுக்குள்ள train போய்ட போகுது, அப்புறம் அவ்ளோதான்.

சார் கம்னு உக்காரு சார், இன்னும் பத்து நிமிஷம் க்கீது.
...........................................................................
இன்னாடி train- னுக்குலாமாடி சிக்னல் இருக்கும். அஞ்சு நிமிஷமா இங்கயே நிக்கிது.

சுகந்தி இன்னா ஆச்சி உனக்கு, கொஞ்சம் பொறு செல்லம்.
...........................................................................
யே யே இன்னாப்பா ஆச்சி ஆட்டோவுக்கு,

சார்ர்ர், பெட்ரோல் தீந்து போச்சி சார், கொஞ்சம் பொறு சார், பெட்ரோல் பங்க் தோ கிது. போட்னு போய்டலாம்.

ஏன்யா இப்பிடி பண்ற,ட்ரெய்ன மிஸ் பண்ணா நான் காலி.

தோ போய்டலாம் சார்,
...........................................................................
யே சுகந்தி தோ விழுப்புரம் ஸ்டேஷன் தெர்து பார்.
...........................................................................


சீக்கிரம் போய்யா, train கிளம்பிட போவுது.
...........................................................................
ப்பா ஒரு வழியா விழுப்புரம் ஸ்டேஷன் வந்துடுச்சிடி.
...........................................................................
சார், சார், காசு,

இந்தா காசு,


"எதுக்கு இந்த ஆள் இந்த ஓட்டம் ஓடரானு தெரியலையே,"

சார் மும்பை வண்டி கிளம்பிடுச்சா,

இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குதுபா, பொறுமையா போ
...........................................................................
மாலினி, மாலினி நீ சாப்ட வரலியா, இங்க தயிர் சாதம் நல்லா இருக்கும், இத விட்டா renikunta- நைட் பதினொரு மணிக்குதான், அங்கயும் எதுவும் கிடைக்காது.

போடி தின்னி பண்டாரம், இந்த தயிர் சோத்துக்குதான் இவ்ளோ நேரம் குதிச்சுக்கிட்டிருந்தியா. போ போ போய் கொட்டிக்க.
...........................................................................

சார், என்ஜின் டிரைவர் மணி எங்கங்க.

யாரு செந்திலா, என்னப்பா அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்திரிக்கியா. உன்னத்தான் தேடிக்கினு இருந்தாரு. தோ .

இன்னா செந்திலு, அம்மா நீ மூணு மணிக்கே கிளம்பிட்டேன்னு சொன்னுச்சி.

இல்லப்பா வழியில ஒரு friend- பார்த்திட்டு வந்தன், அதான்.

சரி சரி சாப்பாட குடு போவும்போது சாப்டுக்குறேன். நேரமாச்சி. மொபைல vibration- ல வச்சிருக்கியா, டிர்ர்ர்ருனு சத்தம் வருது பாரு.

சரிப்பா நான் கிளம்பறேன்.

"ஹலோ, சொல்லு செல்லம்,"

என்ன ட்ரெய்ன புடிச்சிட்டிங்களா,

ம்ம் வந்து சொல்றேன்.""
...........................................................................

2007-April-29-டைரியின் ஒரு பக்கம்-பாகம் 2

முதல் பாகம்!
---------------------------------------------------------------------------------------------------------------------------

"தப்பா நினைக்காதீங்க, பையன் உங்க பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் பேசனும்னு சொல்றான். உங்களுக்கு யாருக்கும் எதுவும் ஆட்சேபனை இல்லன்னா?" 

'கொஞ்சம் இருங்க வந்திடுறேன்,"  

(இன்னா இந்த வாத்தி உள்ள போன ஆள காணும், பேசனும்னுதான சொன்னன்)  

'இங்க வாங்க தம்பி, உட்காருங்க,'  


(இங்கயா, டே லூசாடா நீங்கள்லாம். அஞ்சடி தள்ளி சேர் போட்டு பேசினா அதுக்கு பேர் தனியா பேசறதுன்னு அர்த்தமா?)  


"கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க" 


'யே ஹேமா, நிமிந்து பார்த்து பேசுடி,' 


(இது யார்ரா, பொண்ண விட நல்லா ஒரு பிகரு)  


"உங்களுக்கு என்னங்க பிடிக்காது?"

(என்ன இவரு எடுத்தவுடனே பிடிக்காத விஷயத்த பத்தி கேக்கறாரு)
"பொய் சொன்னா பிடிக்காது!"


(தொழில் சுத்தம், நமக்கு சோறு போடறதே அதானே)
"அப்புறம்?"  


"என்கிட்டே கோவமா பேசினா பிடிக்காது!" 


"ம்"  


"நான் உங்ககிட்ட ஒண்ணு கேக்கலாமா?"  


??
------------------------------------------------


மீண்டும் சந்திப்போம்!!

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

ஆங்கிலம்!- படித்ததில் ரசித்தது


ஆங்கிலம் தெரியாமல் ஆங்கிலம் பயன்படுத்தினால் என்ன ஆகும்? இதோ இப்படித்தான் ஆகும்.

சனி, 18 ஜூலை, 2009

நல்ல தண்ணி கேட்டா உயிருக்கு ஆபத்து....

நல்ல தண்ணி கேட்டா உயிருக்கு ஆபத்து....

தூய நீர் என்பது ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனின் எளிமையான கூட்டுக் கலவை. அது வாசமற்றது, வண்ணமற்றது, சுவையற்றது.

- தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்.

இந்த எளிய உண்மையை சூளைமேடு ராகவா தெருவில் உள்ள சரவணம் மேன்ஷனின் உரிமையாளர் திரு.நாராயணன் அவர்களுக்கு புரிய வைக்க சதாசிவமும் அவரது சில நண்பர்களும் செய்து வரும் முயற்சிகளின் தொகுப்பு இதோ......

ன்னு ஆரம்பிக்கும் இந்தப் பதிவைப் படிச்சி பாருங்க!

நல்ல தண்ணி வேணும்னு கேட்டது தப்பாங்க! அதுக்காக கொலைமிரட்டல், தாக்கும் அபாயம்..னெல்லாம் எத்தனை ஆபத்துக்களைச் சந்திச்சிருக்காங்க!
இந்த மாதிரித் தப்பையெல்லாம் தடுத்து நிறுத்தி நியாயத்தை நிலைநிறுத்தி பொது மக்களைக் காப்பாற்ற வேண்டிய காவல் துறையும் இந்த பொது ஜனத்தை எப்படிக் கையாண்டு இருக்காங்க பாருங்க....!

நம்மால முடிஞ்ச அளவுக்கு இதை வெளியுலகத்துக்கு தெரியப்படுத்தணும் என்கிற நோக்கத்தோட நான் இங்க பதிவா போட்டிருக்கேன்!

பார்ப்போம் இவங்களுக்கு நியாயம் கிடைக்குதா? இல்லையான்னு!

அவங்க போராட்டத்துல நாமளும் தோள் கொடுப்போம்!