ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



புதன், 6 ஜனவரி, 2010

சாலை விபத்துகளும் சுப்ரீம் கோர்ட்டும்





ஆகவே நண்பர்களே,
சாலை விபத்துகளில் காயமடைந்து மருத்துவமனைக்கு வருபவரை எப்.ஐ.ஆர் கொண்டுவர சொல்லி கட்டாயப்படுத்தாமல்  மருத்துவமனை நிர்வாகம் கட்டாயமாக உடனடி முதலுதவி கொடுத்தேயாகவேண்டும் என்றும் காயம்பட்டவரை கொண்டுவந்து மருத்துவமனையில் சேர்த்தவரை காவல்துறை மற்றும் இதரதுறைகள் அனாவசியமாக அலைகழிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
அதாவது உச்சநீதிமன்ற வழக்கு எண்: Appeal(civil) 919 of 2007ல் 23.02.2007 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் ஆணையின்படி, விபத்துகளில் குறிப்பாக சாலை விபத்துகளில் காயம்பட்டவர்கள் அவர்கள் கொண்டுவரப்ப்படும் மருத்துவமனை, அது எந்தவிதமான மருத்துவமனையாக இருப்பினும் அம்மருத்துவமனையாகப்பட்டது காய்ம்பட்டவருக்கு கட்டாயமாக உடனடி முதலுதவி தரவேண்டும். அவர் உடல்நிலை சமநிலைப்படுத்தப்பட்டு தேவைப்படுமாயின் அதிக வசதிகள் உள்ள சிறந்த மருத்துவமனை அல்லது அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படவேண்டும். அதன் பிறகே சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகம் தாம் செய்த மருத்துவத்திற்கான கட்டணம் மற்றும் காவல்துறை சம்பிரதாயங்களை எதிர்பார்க்கலாம்!
சாலைவிபத்தில் அல்லது வேறு விபத்துகளில் காயம்படுபவரை மருத்துவமனைக்கு அழைத்து/கொண்டு செல்லவேண்டும் என்ற எண்ணம் உள்ளவரா நீங்கள்? எனில் தயக்கமின்றி அந்த நற்செயலில் ஈடுபடுங்கள். காயம்பட்டவரை மருத்துமனைக்கு இட்டுச் செல்வதோடு உங்கள் பொறுப்பு முடிந்து போகிறது! காவல்துறைக்கு தகவல் அறிவிப்பதும், முதலுதவி கொடுப்பதும் மருத்துவமனையின் கடமை என்று சொல்கிறது உச்சநீதிமன்ற ஆணை!

மேற்படி உச்சநீதிமன்றம் கொடுத்துள்ள இந்த அடிப்படை உரிமை குறித்த தகவலை தயவு செய்து உங்கள் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்கு தெரிவியுங்கள். அதன்மூலம் தக்க நேரத்தில் பிறரிடம் நாம் என்ன எதிர்பார்க்கலாம் மற்றும் தேவைப்படுவோருக்கு நாம் செய்யவேண்டிய கடமை என்ன என்பதை எல்லோரும் அறிந்துகொள்வர்!

தயவுசெய்து இந்த செய்தியை முடிந்த அளவு எவ்வளவு பேருக்கு தெரியப்படுத்தமுடியுமோ, தெரிவியுங்கள்!!

நன்றி - க. தங்கமணி பிரபு

கருத்துகள் இல்லை: