ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வியாழன், 17 செப்டம்பர், 2009

என்னை பாதித்த ஒரு மரணம்

எங்கள் வீட்டில் தொலைக்காட்சி வரவிற்கு முன், வானொலிதான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. காலை 5.45 மணிக்கு என் தந்தையினால் துவக்கப்படும் வானொலி, இரவு 10.30 மணி புதுவை வானொலி நேயர் விருப்பம் வரை தொடர்ந்து ஒலித்து கொண்டிருக்கும்.

அதில் எனக்கு பிடித்த நிகழ்ச்சிகளான காலை வயலும் வாழ்வும், விவித பாரதியின் வர்த்தக ஒலிபரப்பு, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன நிகழ்ச்சிகள், இரவு நாடகங்கள், நாடக விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடிப்பது-எப்போதுமே இன்று ஒரு தகவல்தான்.

காலை 7.30- ல் இருந்தே வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல், வானொலியை கவனித்துக் கொண்டிருப்போம். அப்போது என் வீட்டில் கைத்தறி மூலம் நெசவு செய்து கொண்டிருந்தோம். என் தாத்தா நெசவு நெய்து கொண்டிருந்தாலும் பத்து நிமிடங்கள் அதை நிறுத்தி விட்டு (தட்டக் தட்டக் என்று ஒரு இடைவிடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்) இன்று ஒரு தகவல் கேட்டு விட்டு மீண்டும் நெசவு நெய்ய ஆரம்பிப்பார்.

என் வானொலி நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் ' தென்கச்சி கோ சுவாமிநாதன்' அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிக்க வருத்தமடைந்தேன்.

அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை இங்கு பதிவு செய்கிறேன்.

என்னை பாதித்த ஒரு வானொலி ஆளுமை மறைந்ததில், என் துயரத்தை விவரிக்க வார்த்தைகளில்லை.

5 கருத்துகள்:

ஊர்சுற்றி சொன்னது…

எனது ஆழ்ந்த இரங்கலையும் பதிவு செய்து கொள்கிறேன். என்னைப் பாதித்த மற்றுமொரு மறைவு.

//காலை 7.30- ல் இருந்தே வேறு வேலைகளில் கவனம் செலுத்தாமல், வானொலியை கவனித்துக் கொண்டிருப்போம். அப்போது என் வீட்டில் கைத்தறி மூலம் நெசவு செய்து கொண்டிருந்தோம். என் தாத்தா நெசவு நெய்து கொண்டிருந்தாலும் பத்து நிமிடங்கள் அதை நிறுத்தி விட்டு (தட்டக் தட்டக் என்று ஒரு இடைவிடா சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும்) இன்று ஒரு தகவல் கேட்டு விட்டு மீண்டும் நெசவு நெய்ய ஆரம்பிப்பார்.//

எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் 7:25 க்கு அதுவும் 5 நிமிடங்கள் மட்டுமே ஒலிபரப்பாகியது! நான் கேட்க ஆரம்பித்தது, 1994-5 ஆக இருக்கலாம்.

ஊர்சுற்றி சொன்னது…

உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்ததற்கு மிகவும் நன்றி.

thamizhparavai சொன்னது…

என்னைப் பாதித்த ஆளுமைகளுள் ஒருவர்..அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்...
அந்தக் குரலின் வசீகரம்,சொல்லும் பாங்கு,முடிவில் தரும் நகைச்சுவை...
அது அவர்தான்.. ஈடு செய்ய யார்...?
:-(((

மனோவியம் சொன்னது…

//அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை இங்கு பதிவு செய்கிறேன்.//உங்களி போன்று எனது வருத்ததையும் இங்கு சார்ப்பிக்கின்றேன்.

மனோவியம் சொன்னது…

//அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களை இங்கு பதிவு செய்கிறேன்.//உங்களி போன்று எனது வருத்ததையும் இங்கு சார்ப்பிக்கின்றேன்.