ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



சனி, 18 ஏப்ரல், 2009

2007-April-29-டைரியின் ஒரு பக்கம்

2007-April-29-
------------------------------------------------------------------------------------------------------

இன்று ஏனோ காலை கண் விழித்ததிலிருந்தே என் வசம் நான் இல்லை. என் செயல்கள் அனைத்தும் உணர்ச்சியின் வசத்திலே நடந்து கொண்டிருக்கிறது. என் அப்பாவும் வழக்கம்போல் இல்லை. ஏழு மணிக்கு கிளம்பவேண்டும்.

நேற்று புதியதாய் எடுத்து வந்திருந்த ப்ளூ டெனிம் ஜீன்சும், ராம்ராஜ் வெள்ளை காட்டன் சட்டையும் அணிந்து புறப்பட தயாரானேன்.

என் அப்பா சொன்னார் "ஏழு இருபதுக்கு புறப்பட்டா போதும்பா, நீ வண்டி எடுத்துட்டு வந்துடு, நாங்க எல்லாம் பஸ்ல வந்துடுறோம்."

இருபது கிலோ மீட்டர் போகணும் . ஏழு இருபதுக்கு கிளம்பினா எட்டு மணிக்குள்ள போய்டலாம். கொஞ்சம் படபடப்பா இருக்குது. ஒரு தம் போடணும் போல இருக்கு. யோசனையாவும் இருக்கு. "கிட்ட வரும்போது வாசனை அடிக்குமோ".

"ஒரு கிங்க்ஸ் ஒரு பூமர் குடுங்க", இந்த செல்போன் வேற நேரங்கெட்ட நேரத்துல அடிச்சுக்கிட்டு , "அப்பா, சொல்லுங்கப்பா, வழியில இருக்கேன்ப்பா, இன்னும் இருபது நிமிஷத்துல வந்திடுவேன்,"

"ஏங்க, இங்க வாத்தியார் பூவராகவன் வீடு எங்கிங்க இருக்கு", அந்த வீடா இருக்குமோ? நம்ம ஆளுங்க யாரையும் காணுமே? எல்லாம் ஒரு மாதிரி பாக்குறானுங்க.

"டேய் தம்பி, இந்த வீடுதான் வா , இவருதான் பூவராகவன் "," வணக்கங்க"

ஏன்டா டேய், உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா?

"தம்பி என்ன புது பேன்ட் புது சட்டை, இப்பதான் எடுத்து போட்டுட்டு வர மாதிரி இருக்கு",

"இல்லக்கா, எடுத்து ஒரு வாரம் ஆச்சி, இப்பதான் போடுறேன்",

" தம்பி என்ன வேலை செய்யறீங்க", "ஒரு கம்ப்யூட்டர் கம்பனியில சேல்ஸ் மேனேஜரா இருக்கேங்க(நீ தெரிஞ்சிகிட்டு என்னடா பண்ணபோற)"

எதுக்கு வந்திருக்கமோ அத தவிர எல்லாம் நடக்குது.

"சரி சரி பொண்ண கூட்டிட்டு வாங்கப்பா" இவ்ளோ நேரம் எங்கடாப்பா போயிருந்த ?

"தம்பி, காபி எடுத்துக்கோங்க ","பாப்பா, இப்பிடி உக்காரம்மா",

"ப்பா, கொஞ்சம் வெளில வாங்கப்பா", "என்ன தம்பி ",

"ப்பா, பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் தனியா பேசணும்",

"இருப்பா, பொண்ணோட அப்பாகிட்ட கேக்கறேன்",


அப்புறம என்ன நடந்தது , நாளைக்கு சொல்றேன் என்ன?

2 கருத்துகள்:

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

பொண்ணு பாக்கப் போன எடத்துல என்னப்பா சஸ்பென்ஸ்.. சீக்கிரம் சொல்லுங்க பாசு..

சிவக்குமரன் சொன்னது…

வருகைக்கு நன்றி கார்த்திகைப் பாண்டியன்.....