எழுத்தாளர் ஜெயமோகனோட இணைய தளத்த ஓரிரவில் படித்ததின் விளைவால் சில சந்தேகங்கள் :
இலக்கியம் என்றால் என்ன? அப்ப நா படிக்கறதெல்லாம் இலக்கியம் இல்லியா? எனக்கு தமிழ்ல அச்சடிசிருக்கிற எதுவும் எந்த புத்தகமும் ஒரு பத்து பக்கத்த தாண்டி படிக்க முடிஞ்சா அது புத்தகம். இல்லன்னா அது குப்பை.
ஆனா இப்போ கொஞ்ச நாளா இணையத்துல நடக்குற விவாதங்களை பார்த்தா, நான் படிச்ச எதுவுமே இலக்கியம் இல்லன்னு தோணுது.
ரெண்டு மூணு வார்த்தைகளை ஜெயமோகன் தளத்துல பார்த்தேன். வணிக இலக்கியம், சிறுவர் இலக்கியம். இந்த மாதிரி, என்னோட கேள்வி என்னன்னா, ஒரு சராசரி தமிழ் படிக்க தெரிஞ்ச வார, மாத, இதழ் மற்றும் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் , சுந்தர ராமசாமி, சுப்ரமணிய சிவா, நாஞ்சில் நாடன், எஸ்.ராமக்ரிஷ்ணன், ஜெயமோகன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, லட்சுமி, திலகவதி, ஜெயந்தி, ரமணி சந்திரன்,ராஜேந்திரா குமார், ராஜேஷ்குமார், தமிழ்வாணன் இந்த மாதிரி கலந்து கட்டி படிக்கிற வாசகரெல்லாம், இலக்கிய வாசகர் இல்லியா?
ஜெயமோகன் தளத்துல நான் படிச்சு புரிஞ்சுகிட்டது, அவரவர் பார்வையில் ஒரு அளவு கோளோட இருக்காங்க. இதுதான் இலக்கியம் இது இலக்கியம் இல்லன்னு.
அப்போ இலக்கியம்-க்ங்கரதுக்கு ஏதாவது வரைமுறை இருக்கா?
அதோட அளவு கோள் என்ன?
எப்பிடி படிக்கும்போதோ/படிக்கறதுக்கு முன்னாடியோ ஒரு புத்தகம் இலக்கிய புத்தகமா இல்லியான்னு தெரிஞ்சுக்கறது?
ஒரு எழுத்தாளரோட படைப்புகளை எப்பிடி ஒரு வரைமுறைக்கு கொண்டு வர்றது. அது இலக்கிய படைப்பா? இல்லியான்னு?
யாரவது இதுக்கு ஒரு விளக்கம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக