ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வெள்ளி, 25 டிசம்பர், 2009

சுய கழிவிரக்கம் (வார்த்தை சரியா?)




நான் கொஞ்சம் கொஞ்சமாய் மன நோய்க்கு உள்ளாகிறோனோ என்ற சந்தேகம் கொஞ்ச நாட்களாய் உள்மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது.


சில மாதங்களுக்கு முன் ஒரு புதிய பகுதியின்   பொறுப்பை என் நிறுவனத்தில் ஏற்றுக்கொள்ளும்போதே தெரிந்த விஷயம்தான். வேலைப்பளு  மிக  அதிகம்  என. வாடிக்கையாளருடன் நேரடிதொடர்பில் இருப்பதால் தொடர்ந்த தொலைபேசி அழைப்புகள் பிரச்சினைகள், என் நிறுவன உள்வட்ட குழுவில் சரியான தொடர்பில்லாமை, ஒத்துழைப்பில் பிரச்சினை. பணம் கொடுத்த வாடிக்கையாளரின் முறையற்ற பேச்சு என மூளைக்கு யோசிக்க அவகாசமில்லாத ஓட்டம் . தூக்கம்  தொலைத்த  நாட்கள்  . தூக்கமில்லாததால்       மங்கிய   முகம். ஓவென  அழத்தோன்றும்  மனது .  நான் எதை   நோக்கி போய்க்கொண்டிருக்கிறேன். நான் செல்லும்  பாதை  சரியா? சிவா,  கொஞ்சம் நின்னு  யோசிடா.  சீக்கிரம்  சரி  பண்ணிக்கடா. இல்லன்னா  பைத்தியமயிடுவடா. என்னோட  பொறுமை  பத்து  நிமிஷத்துக்கு  மேல  தங்க  மாட்டேங்குது. என் நண்பர்கள் கூட கொஞ்சம் நேரமாவது சிரிச்சி பேசி ரொம்ப நாளாயிடுச்சி.

இந்த பிரச்சினைகெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன. நான் எந்த இடத்துல தப்பு பண்றேன். ஒருவேளை அடுத்தவங்க பிரச்சினைய நான் புரிஞ்சிக்க மாட்டேங்குறேனா?  இல்ல என்னோட எதிர்பார்ப்பு  ரொம்ப அதிகமா?  மூணாவது மனுஷனா என்னோட பிரச்சினைய யோசிச்சா தீர்வு கிடைக்கும்னு புரியுது. ஆனா யோசிக்க முடியாம மூளை ரொம்ப குழம்பி கிடக்கு. பறவைப் பார்வையில என்னைப் பார்க்கணும்னு முயற்சி பண்ணி பண்ணி தோத்துத்தான் போறன்.

யார் இருந்தாலும் இல்லாட்டியும் வேலை நடந்துக்கிட்டுதான் இருக்கும்னு நான் அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்லிக்கிட்டு இருக்கேன். ஆனா ஒரு வேலைய ஆரம்பிச்சுட்டு நாம  இல்லாம இருந்தா இந்த வேலை முடியாதுன்னு நான் அடிக்கடி நினைச்சுக்கிட்டு இருக்கேன்.  இது அடுத்தவங்க மேல எனக்கு இருக்குற அவநம்பிக்கையா இல்ல வேற எதுவும் காரணமா? இது கூடவே இன்னும் ஒண்ணும் யோசிச்சிக்கிட்டு இருக்கேன், முன்னாடி அனுபவம் ஒருத்தனை நம்பாதேன்னுசொல்லுது. ஆனா வேற வழியில்லாம அவனையே மறுபடியும் நம்பி மண்ணை கவ்வ வேண்டியதா இருக்கு. நான் ஏன், மறுபடியும் அவனையே நம்பறேன்? காரணம் எவ்வளவு தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது.

இந்தமாதிரி பைத்தியகாரத்தனமான சிந்தனையோடவே இருந்தா நான் என்ன ஆவப்போறேன்னு தெரியலையே?

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சிவா,

நல்ல குழப்பத்தில் இருக்கிறாய். அடுத்த கட்ட நகர்விற்கான ஆயத்தம் இது வேறொன்றுமில்லை.

தேவை நல்ல நண்பனும் SWOT Analysisம்தான்.

மற்றதெல்லாம் சாதாரணம்.

சிவக்குமரன் சொன்னது…

நன்றி அண்ணாச்சி. SWOT Analysis, கொஞ்சம் விளக்கம் தேவை.
தனி மடலில் தெரியப் படுத்துங்களேன்.

selventhiran சொன்னது…

அண்ணாச்சி ஸ்வாட் பற்றி மெயில் அனுப்பி இருப்பார் என்பதால் அதைப்பற்றிய விளக்கம் தவிர்க்கிறேன். அஃதொரு அதிமருந்து...

செயலற்ற தன்மையைவிட செயலாற்றுவது சிறந்தது அர்ஜூனா...! என்கிற கீதாஉபதேசம் என்னை ஒவ்வொரு அடைப்பிலிருந்தும் உந்தித் தள்ளும்.

விட்டுத்தள்ளுங்க... சுட்டுத்தள்ளுங்க...

சிவக்குமரன் சொன்னது…

நன்றி செல்வா..

அண்ணாச்சியின் ஸ்வாட் பற்றிய விளக்கம்> பெயர்தான் பெரிதாக இருக்கிறதே தவிர எளிதான ஒன்று SWOT.

Strength, Weakness, Opportunities and Threats.