ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 13 ஜூலை, 2009

வெயிலானுக்கு ஒரு பகிரங்க நன்றி.

மொபைலில் பிடிக்க முடியாத உயரம்
மழையில் நனைந்த சாலை
காலை வருடிய மேகக்கூட்டம்
முகத்தில் அறைந்த சாரல் காற்று
பாதைகளில்லா பயணம்
ரத்தம் உறிஞ்சிய அட்டை
எலும்பை ஊடுருவிய குளிர்
உடன் சிரித்து மகிழ நண்பர்கள்.
வெள்ளிக்கம்பியாய் அருவிகள்..................





மனதின் அழுத்தங்கள் ஒதுங்கிய ஒரு மாலையில் தொடங்கிய பயணம்.

அழைத்துச் சென்ற வெயிலானுக்கு நன்றி சொல்ல வேண்டுமா என்ன? இவ்வளவு நாள் அழைத்து செல்லாததற்கு என் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுளின் தேசமான கேரளாவில் உள்ள நெல்லியம்பதி என்னும் ஒரு மலைப் பிரதேசத்திற்கு ஒரு பயணம். நான்,சஞ்சய்,வடகரைவேலன்,நாடோடி இலக்கியன் மற்றும் வெயிலான். பயணத்தை விவரிக்க/வர்ணிக்க எங்கு தேடியும் என்னிடம் வார்த்தைகள் இல்லாததால், அண்ணாச்சியையோ, சஞ்சயையோ படங்களுடன் பதிவிட அழைக்கிறேன்.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

படங்களுக்காகக் காத்திருக்கிறேன் சிவா.

நாடோடி இலக்கியன் சொன்னது…

அடடா அட்டை விஷயத்தை இன்னும் மறக்கலியா சிவா?
சுத்தி சுத்தி பார்த்தாலும் அங்கே தானப்பா வரீங்க.

நானும் புகைப்படத்திற்கு வெயிட்டிங் சிவா.

☼ வெயிலான் சொன்னது…

ம்...... நடக்கட்டும். நடக்கட்டும்.

Sanjai Gandhi சொன்னது…

புது வலைதளத்தில் எழுத காத்திருக்கிறேன்.

சாமக்கோடங்கி சொன்னது…

எனக்கும் லிங்க் கொடுங்கள்.. நானும் பார்க்க ஆவலாக உள்ளேன்... நல்ல ஒரு பயண அனுபவம் பெற்று இருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.. அட்டைகள் நிறைய இருக்கின்றனவா..? எங்கள் மக்கள் செல்ல பயப்படுவார்கள்.. பொய் சொல்லி தான் அழைத்து செல்ல வேண்டும்... நன்றி உங்கள் தகவலுக்கும் உங்கள் நண்பர்களுக்கும்....