ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்
வெள்ளி, 20 மார்ச், 2009
ஒரு ஞாயித்துக்கிழமையும், ஞானும் பின்னே எண்ட wife-ம்
ஒரு ஞாயித்துகிழமை பின் காலை 10.30 மணி
கணவன்: என்னம்மா, மதியம் என்ன சமையல்? மீன் வாங்கீட்டு(பரிசலோட ஸ்லாங்) வரட்டுமா?
குழந்தைய காட்டி,
மனைவி : இவன் பண்ற அட்டகாசம் தாங்க முடியலங்க.
கணவன் : நான் மதியம் என்ன சமையல்னு கேட்டேன்?
மனைவி: நேத்து அப்பிடிதான் இட்லி குண்டான் மேல்மூடிய தூக்கி போட்டு நசுக்கிட்டான்.
கணவன் : மதியத்துக்கு என்ன வேணும்னு கேட்டேன்? மீனா? கோழியா?
மனைவி : காலையில அப்பிடிதான் இட்லி மாவு குண்டான கவுக்க பாத்தான்.
கணவன் :நான் இன்னா கேக்கறன், நீ இன்னா பதில் சொல்லினுகிற?
மனைவி : அப்புறம் சொல்ல மறந்துட்டேன்! ஒங்க ஷேவிங் செட்ட ரெண்டா ஒடச்சிட்டான், ஒங்க அருமை புள்ள!
கணவன் :(இன்னிக்கு மதியம் ஹோட்டல் போலாம்னு சொல்ல போறாளா, கடவுளே) சாயந்திரம் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா?
மனைவி : மதிய சாப்பாட்டுக்கு அங்கதான் வரேன்னு சொல்லி இருக்கேன்! உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்!!
கணவன்: ???!!!
---------------------------------------------------
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.
யப்பா ! தலீவரே , நா தான் டவுசரு பாண்டி, சோக்கா கீதுபா உம் மேட்டரு,
அக்காங் !
அய்யே , நம்ப ஊட்டாண்ட தான் ரவ வாயேன் உஸ்தாது கணக்கா இருக்கும்.
நா உ ஊட்டாண்ட வந்தாச்சி ஒரு வோட்டு கூட போட்டாச்சீபா ! வர்ட்டா.
நம்பளுக்கு நேரீ வேலை கீதுபா !!!!!!!!!!!!!!!!!!!!
ஏன் வருபவர்கள் கருத்து சொல்வதில்லை/ஓட்டும் போடுவதில்லை. யாராவது சொல்லுஙகளேன்.
நம்பல மேரி மன்சாளுங்கோ அத்த எல்லாம் கண்டுக்க கூடாதுப்பா
நாம அர்ஜுன மேரி எய்ம் பண்றது மட்டும் தான் மிக்கியம்,வர்ட்டா இதுக்கெல்லா
போய் கவலைப்படாத நைனா !!!!!!!!
கருத்துரையிடுக