ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்
ஞாயிறு, 29 மார்ச், 2009
ச.ந.கண்ணனின் கங்குலி பற்றிய பதிவுக்கு ஒரு கருத்து மறுப்பு மற்றும் சில எதிர்வாதம்
செல்வேந்திரனின் பதிவுல இருந்த லிங்க் மூலமா படிச்ச ச.ந.கண்ணனோட கங்குலி பதிவப் பத்தின என்னோடகருத்து. அந்த பதிவுல என்னோட எண்ணத்த பதிவு பண்ண முடியாததால இந்த பதிவு.
///கங்குலிக்கு ஏன் இத்தனை ஈகோ என்று புரியவில்லை. தோனி தலைமையிலான அணிக்குத் தரவேண்டிய மரியாதையை இன்றுவரை கங்குலி கொடுத்தது கிடையாது.///
கங்குலி ஈகோ பார்த்திருந்தார்னா, அவரால செலக்ட் ஆகி இன்னிக்கு விளையாடிட்டு இருக்கிற வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், மகேந்திரசிங் டோணி " மாதிரி இன்னிக்கி நட்சத்திரமா பிரகாசிக்கிரவங்க எல்லாம் வந்திருக்கமாட்டங்க.
///ஓஹோ, நான் அப்படியொன்றும் நினைக்கவில்லையே என்று மட்டமான தொனியில் பேட்டி கொடுக்கிறார். கங்குலி ஐந்து வருடங்கள் சாதித்துக்காட்டியதை தோனி இந்த ஒன்றரை வருடத்தில் செய்துமுடித்துவிட்டார். யாருக்கு வேண்டும் கங்குலியின் ஒப்புதல்?///
தொழில் தெரிஞ்சவங்க சொல்லுவாங்க புதுசா ஒரு மார்க்கெட் உருவாக்கறதுதான் கஷ்டம். ஒருத்தன் நல்லா உருவாக்கின market-ல வியாபாரம் பண்றது பெரிய விஷயமில்ல.
செல்வேந்திரனோட இந்த பதிவ நான் உங்களுக்கு பதிலா சொல்றேன்
இந்த உலக கோப்பை முடிஞ்சதும், நீங்களும் இருந்து நானும் இருந்தா, என்ன நடக்குதுன்னு பார்ப்போம். விரைவில் எதிர்பாருங்கள், தோனி vs ஷேவாக், தோனி vs யுவராஜ் .................தோனி vs ................ இந்த மேட்ச்லயும் தோனி ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணுவோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 கருத்துகள்:
தொழில் தெரிஞ்சவங்க சொல்லுவாங்க புதுசா மார்க்கெட் ஒரு உருவாக்கறதுதான் கஷ்டம். ஒருத்தன் நல்லா உருவாக்கின market-ல வியாபாரம் பண்றது பெரிய விஷயமில்ல //
பிரமாதம் சிவா... யாரோ போட்டு வைத்த ராஜபாட்டையில் பயணம் வேண்டுமானால் செய்துகொள்ளுங்கள். பாட்டையை உருவாக்கியவனைக் கேலி செய்யாதீர்கள் என்ற என் அபிப்ராயம்தான் உங்களுடையதும்.
//இந்த உலக கோப்பை முடிஞ்சதும், நீங்களும் இருந்து நானும் இருந்தா, என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.//
கொஞ்சம் ஓவராத்தான் போய்க்கிட்டு இருக்கு
// புதுசா ஒரு மார்க்கெட் உருவாக்கறதுதான் கஷ்டம். ஒருத்தன் நல்லா உருவாக்கின market-ல வியாபாரம் பண்றது பெரிய விஷயமில்ல.//
உண்மைதான். டிராவிட்டின் காலத்தில் இந்திய கிரிகெட் அணி அழிந்துவிட்டது என்றே சொல்லலாம்.
அதுவும் 20-20 நடந்துகொண்டிருக்கும் போது ராஜினாமா செய்தது.
20-20ல் கலந்து கொள்ளமாட்டோம் என்று மூவரும் அறிவித்தது
போன்றவைகள் மொத்தமாக அழித்துவிட்டது என்றே சொல்லலாம்.
அப்படி அழிந்தபோன ஒரு அணியை மீட்டெடுத்த பெருமை யாரைச் சேருகீறது என்று சொல்லமுடியுமா..?
செல்வேந்திரன் அவர்களின் இடுகையில் இட்ட பின்னூட்டத்தையே இங்கேயும் இடுகிறேன்...
இந்த கிரிக்கெட்டையே முதல்ல நாட்டை விட்டு துரத்தணும். இந்த விளையாட்டால் மனதுக்கு உறுதியும் உந்துதலும் ஏற்படுவதாய் எனக்குத் தோணவில்லை.
தவிரவும், இன்று இது ஒரு திறமையான வியாபாரமாக மட்டுமே ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. விளையாட்டு என்ற அர்த்தத்தில் இருந்து 'கிரிக்கெட்' விலகிப் போய் வெகுநாட்களாகிவிட்டது.
///ஊர் சுற்றி -கூறியது...இந்த கிரிக்கெட்டையே முதல்ல நாட்டை விட்டு துரத்தணும். இந்த விளையாட்டால் மனதுக்கு உறுதியும் உந்துதலும் ஏற்படுவதாய் எனக்குத் தோணவில்லை.///
நீங்க சொல்றது தொழில் முறை கிரிக்கெட் விளையாடுரவங்களுக்கு வேணா பொருந்தலாம். தினசரி இயந்திர வாழ்க்கை வாழரவங்களுக்கு விளையாட்டு எவ்வளவு முக்கியங்கறது, விளையாடுர என்னை மாதிரி ஆளுங்களுக்கு தெரியுங்க. நீங்க எனக்கு சொல்லுங்க எந்த மாதிரி விளையாட்டு விளையாடினா '''மனதுக்கு உறுதியும் உந்துதலும்''' ஏற்படும்னு?
யோவ் ஊர் சுற்றி,
எதுக்கு சார் எல்லா இடத்துலயும் தேடி தேடி இதே பின்னூட்டம் போடறீங்க !
சிவக்குமரன்,
கங்குலி அருமையான பேட்ஸ்மேன், நல்ல யுடிலிட்டி பவுலேர். மோசமான பீல்டர்.
கிரிக்கெட் இந்தியாவுல மோசமான நிலைல இருந்தபோது அவருக்கு கேப்டன்சி வந்தது. அவர் பீரியட்ல நல்ல நல்ல ப்ளேயர்ஸ் எல்லாம் வந்தாங்க. அத தவிர, மோடிவேட் பண்றதுல அவரோட முத்திரைய பதிச்சாரு. ஆனா க்ரவுண்ட்ல பீல்டிங் ப்லேச்மேன்ட் எல்லாம் ரொம்பவே சுமார் ரகம் தான். முதல் முதலா ஒரு இந்திய காப்டைனுக்கு ஒரு வேகபந்து வீச்சாளார நல்லா ஹேண்டில் பண்ண தெரிஞ்சி இருந்தது கங்குலிக்கு தான். அதே சமயம் சாப்பலும், இவரும் சேர்ந்து பண்ணின அரசியல்ல மறுபடியும் நம்ப டீம் மோசமான நிலைக்கு போன போது தான் டிராவிட் கேப்டன் ஆனாரு. அதுனால டிராவிட் மோசம்ன்னு சொல்றது எல்லாம் ஓவர். டோனி ஒரு நாள் போட்டி மற்றும் ட்வென்டி ட்வென்டி போட்டில கலக்கி இருக்காரு. ஆனா டெஸ்ட் மேட்ச் இன்னும் கொஞ்சம் வருஷம் கழிச்சி தான் ஜட்ஜ் பண்ண முடியும்.
மார்க்கெட் உருவாக்கறது கஷ்டம்னா அசார், கபில் எல்லாம் காப்டைன்சி பண்ணினது என்ன சும்மாவா ?
கருத்துரையிடுக