ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாக்குதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மார்ச், 2009

ச.ந.கண்ணனின் கங்குலி பற்றிய பதிவுக்கு ஒரு கருத்து மறுப்பு மற்றும் சில எதிர்வாதம்


செல்வேந்திரனின் பதிவுல இருந்த லிங்க் மூலமா படிச்ச ச.ந.கண்ணனோட கங்குலி பதிவப் பத்தின என்னோடகருத்து. அந்த பதிவுல என்னோட எண்ணத்த பதிவு பண்ண முடியாததால இந்த பதிவு.

///
கங்குலிக்கு ஏன் இத்தனை ஈகோ என்று புரியவில்லை. தோனி தலைமையிலான அணிக்குத் தரவேண்டிய மரியாதையை இன்றுவரை கங்குலி கொடுத்தது கிடையாது.///

கங்குலி ஈகோ பார்த்திருந்தார்னா, அவரால செலக்ட் ஆகி இன்னிக்கு விளையாடிட்டு இருக்கிற
வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், மகேந்திரசிங் டோணி " மாதிரி இன்னிக்கி நட்சத்திரமா பிரகாசிக்கிரவங்க எல்லாம் வந்திருக்கமாட்டங்க.

///
ஓஹோ, நான் அப்படியொன்றும் நினைக்கவில்லையே என்று மட்டமான தொனியில் பேட்டி கொடுக்கிறார். கங்குலி ஐந்து வருடங்கள் சாதித்துக்காட்டியதை தோனி இந்த ஒன்றரை வருடத்தில் செய்துமுடித்துவிட்டார். யாருக்கு வேண்டும் கங்குலியின் ஒப்புதல்?///

தொழில்
தெரிஞ்சவங்க சொல்லுவாங்க புதுசா ஒரு
மார்க்கெட் உருவாக்கறதுதான் கஷ்டம். ஒருத்தன் நல்லா உருவாக்கின market-ல வியாபாரம் பண்றது பெரிய விஷயமில்ல.

செல்வேந்திரனோட இந்த பதிவ நான் உங்களுக்கு பதிலா சொல்றேன்


இந்த உலக கோப்பை முடிஞ்சதும், நீங்களும் இருந்து நானும் இருந்தா, என்ன நடக்குதுன்னு பார்ப்போம். விரைவில் எதிர்பாருங்கள், தோனி vs ஷேவாக், தோனி vs யுவராஜ் .................தோனி vs ................ இந்த மேட்ச்லயும் தோனி ஜெயிக்கணும்னு பிரார்த்தனை பண்ணுவோம்.