ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வெள்ளி, 20 மார்ச், 2009

ஒரு ஞாயித்துக்கிழமையும், ஞானும் பின்னே எண்ட wife-ம்


ஒரு ஞாயித்துகிழமை பின் காலை 10.30 மணி

கணவன்: என்னம்மா, மதியம் என்ன சமையல்? மீன் வாங்கீட்டு(பரிசலோட ஸ்லாங்) வரட்டுமா?

குழந்தைய காட்டி,
மனைவி : இவன் பண்ற அட்டகாசம் தாங்க முடியலங்க.

கணவன் : நான் மதியம் என்ன சமையல்னு கேட்டேன்?

மனைவி
: நேத்து அப்பிடிதான் இட்லி குண்டான் மேல்மூடிய தூக்கி போட்டு நசுக்கிட்டான்.

கணவன்
: மதியத்துக்கு என்ன வேணும்னு கேட்டேன்? மீனா? கோழியா?

மனைவி
: காலையில அப்பிடிதான் இட்லி மாவு குண்டான கவுக்க பாத்தான்.

கணவன்
:நான் இன்னா கேக்கறன், நீ இன்னா பதில் சொல்லினுகிற?

மனைவி
: அப்புறம் சொல்ல மறந்துட்டேன்! ஒங்க ஷேவிங் செட்ட ரெண்டா ஒடச்சிட்டான், ஒங்க அருமை புள்ள!

கணவன்
:(இன்னிக்கு மதியம் ஹோட்டல் போலாம்னு சொல்ல போறாளா, கடவுளே) சாயந்திரம் உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா?

மனைவி
: மதிய சாப்பாட்டுக்கு அங்கதான் வரேன்னு சொல்லி இருக்கேன்! உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்!!
கணவன்: ???!!!
---------------------------------------------------

6 கருத்துகள்:

விக்னேஷ்வரி சொன்னது…

உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன். நல்லா எழுதுறீங்க. வாழ்த்துக்கள்.

சிவக்குமரன் சொன்னது…

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி விக்னேஷ்வரி.

டவுசர் பாண்டி சொன்னது…

யப்பா ! தலீவரே , நா தான் டவுசரு பாண்டி, சோக்கா கீதுபா உம் மேட்டரு,

அக்காங் !

அய்யே , நம்ப ஊட்டாண்ட தான் ரவ வாயேன் உஸ்தாது கணக்கா இருக்கும்.

டவுசர் பாண்டி சொன்னது…

நா உ ஊட்டாண்ட வந்தாச்சி ஒரு வோட்டு கூட போட்டாச்சீபா ! வர்ட்டா.

நம்பளுக்கு நேரீ வேலை கீதுபா !!!!!!!!!!!!!!!!!!!!

சிவக்குமரன் சொன்னது…

ஏன் வருபவர்கள் கருத்து சொல்வதில்லை/ஓட்டும் போடுவதில்லை. யாராவது சொல்லுஙகளேன்.

டவுசர் பாண்டி சொன்னது…

நம்பல மேரி மன்சாளுங்கோ அத்த எல்லாம் கண்டுக்க கூடாதுப்பா
நாம அர்ஜுன மேரி எய்ம் பண்றது மட்டும் தான் மிக்கியம்,வர்ட்டா இதுக்கெல்லா
போய் கவலைப்படாத நைனா !!!!!!!!