ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்
செவ்வாய், 23 ஜூன், 2009
உதவிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
உங்களுக்கு நினைவு இருக்கலாம்...சில நாட்களுக்கு முன் உங்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தேன்.(நல் இதயங்களுக்கு ஓர் வேண்டுகோள்). உதவிய உள்ளங்களுக்கும்/உதவ நினைத்து இயலா உள்ளங்களுக்கும் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சென்ற சனிக்கிழமை (20-06-2009)அன்று நாங்கள்(இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்) சுமார் எட்டு பேர் ஒன்று சேர்ந்து, ஒன்று முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாய்ப்பாடு, சிலேட் மற்றும் பலப்பம், மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டு 300 பக்க நோட்டுகள், ஒரு பால் பாயிண்ட் பேனா வழங்கினோம். மொத்தம் 252 மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியை தத்தெடுக்கும் முயற்சியில் சுமார் முப்பது முன்னாள் மாணவர்கள் சேர்ந்து ஒரு குழுவாக முயற்சிக்கிறோம்.
உதவிய நல் உள்ளங்களுக்கு மிக்க நன்றி.
மேலும் புகைப்படங்களுக்கு இங்கே!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
4 கருத்துகள்:
// நான் நல்லவன் என்று சொல்லி ஊரை ஏமாத்த கெட்டவனும் இல்லை... நான் கெட்டவனு உண்மையை ஒத்துக்க நல்லவனும் இல்லை.... நான் சராசரி மனிதன்....//
எல்லாம் இங்கயே சொல்லிட்டீங்க! அப்புறம் இது வேற எதுக்கு?
//எனது முழு சுயவிவரத்தைக் காண்க//
ஹா ஹா ஹா
நாமக்கல் சிபி, வருகைக்கு நன்றி!
பகிர்தலுக்கு நன்றி..
சூப்பரப்பு.. வாழ்த்துகள்..
கருத்துரையிடுக