ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



திங்கள், 11 மே, 2009

நல் இதயங்களுக்கு ஓர் வேண்டுகோள்

அன்பின் நண்பர்களுக்கு,

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த கல்யாணம்பூண்டி(மிகப் பின்தங்கிய ஒரு கிராமம்) என்ற ஒரு கிராமத்திலிருக்கும் நடுநிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து, பள்ளிக்கு இலவச கணினி பயிற்சி மையம் ஒன்று ஆரம்பித்து தரலாம் என்று முயற்சியில் இறங்கி உள்ளோம்

உதவும் மனம் கொண்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தங்களிடம் இருக்கும் கணினி தொடர்பான தமிழ் வழியிலான பழைய புத்தகங்கள் ஏதேனும் இருப்பின் கொடுத்து உதவுங்கள்.

இது எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலைப்பள்ளி மட்டுமே.

இது விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் வழியில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

நான் கோயம்புத்தூரில் பணிபுரிகிறேன். என் வேலை தொடர்பாக ஈரோடு, சேலம், திருப்பூர், பெருந்துறை, ஆத்தூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு குறைந்தது மாதம் ஒரு முறையாவது வருபவன்.

மேற்கண்ட ஊர்களில் இருப்பவர்களில் யாரேனும் புத்தகங்கள் கொடுக்க விரும்பினால், எனக்கு தனிமடலிலோ (shivanss@gmail.com-9360297050) அல்லது செல்லிடப்பேசியிலோ தெரியப்படுத்தினால், நான் நேரில் வந்து பெற்றுக் கொள்கிறேன்.

இந்த ஊர்களை தவிர்த்து வேறு ஊர்களில் வசிப்பவர்களிடம் புத்தகமிருப்பின் தெரியப்படுத்துங்கள், நண்பர்கள் மூலம் பெற்றுக் கொள்கிறேன்.

உதவும் நல் உள்ளங்களுக்கு, முன்கூட்டிய நன்றி!!!

1 கருத்து:

Sivakumar சொன்னது…

Appreciate u'r efforts!
I found computer/programming related books in Tamilnenjam.ord and PKP blogs.