ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



ஞாயிறு, 24 மே, 2009

படித்ததில் ரசித்ததும்&பிடித்ததும்

சமீபத்தில் கோயம்புத்தூரில் இருந்து சென்னை சென்று கொண்டு இருந்தபோது, சேலம் ஜங்கஷனில் சாப்பாடு பார்சல் வாங்கினேன். வழக்கமாய் நான் சாப்பிடும் அளவை விட அது சற்று அதிகமாய் இருந்தது. என்னால் முடிந்தவரை சாப்பிட்டுவிட்டு மீதியை அதிலேயே கொட்டிவிட்டு, பார்சல் வந்த பேப்பரிலேயே ஒரு பகுதியை கிழித்து கை துடைக்க போனேன். அந்த பேப்பரில் இருந்த ஒரு அறிவுரை/விஷயம்..என்ன பொருத்தம்!!!

-----------------------------------------------------------------------------------------------






பால் பாயசம், லட்டு, பச்சடி, ஊறுகாய், நான்கு வித பொரியல், இரண்டு கூட்டு, அவியல், ஸ்வீட், பச்சடி, சட்னி, அப்பளம், உருளைக்கிழங்கு வறுவல், பக்கோடா, சப்பாத்தி, மினி தோசை, தயிர் வடை தவிர நான்கு வகை சாதம், பாதாம்கீர்... இவையெல்லாம் ஒரு ஐந்து வயதுக் குழந்தைக்கு இலையில் பரிமாறப்பட்டவை.

இவைகளில் எதை, எப்படி இந்தக் குழந்தையால் சாப்பிட முடியும்?

உருளைக் கிழங்கு சிப்ஸை தின்று, பாதாம் கீரையும் குடித்து விட்டு இலையை அப்படியே விட்டுச் சென்ற குழந்தைகளை, அவர்களது பெற்றோரைப் போலவே, இலையை எடுப்பவர்களும் கவனிக்கவில்லை, பொருட்படுத்தவில்லை.

திருமண விருந்து ஒன்றில் கண்ட இக்காட்சி என் கண்களை குளமாக்கின. ஜாண் வயிற்றுக்கு இத்தனை ஐட்டங்கள் நிச்சயம் தேவையில்லை. ஒருவருக்கொருவர் கண்டு பேசி மகிழும் நேரம் சுவையாக ஏதோ சாப்பிட்டோம் என்றில்லாமல், உணவுக்கு இப்படி வாரி இரைப்பது அனாவசியம்!







வெள்ளப் பெருக்கு, பூமி அதிர்வு, சுனாமி போன்ற பேரழிவுகளால் வீடிழந்து, நாடிழந்து, பச்சிளங்குழந்தைகளுடன், "பசி, பசி...' என்று கதறித் துடிக்கும் மக்களின் அவல நிலை என் கண்முன் வந்தது.


ஆடம்பரம் தேவை தான்; உணவை வீணடிப்பதில் அது வேண்டாமே!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
--எழுதியது யாரோ?

கருத்துகள் இல்லை: