*****************************************************************************************
நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்..பேச்சு எங்கெங்கோ சென்றது. ஒரு கட்டத்தில், "திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள்?' எனக் கேட்டார்.
"என்னடா இது... திருநெல்வேலிக்கே அல்வாவா? சேலத்துக்கே மாம்பழமா?' என நினைத்து, கேள்வியில் ஏதோ விஷயம் தொக்கி நிற்கிறது என அனுமானித்து, பதிலைச் சொன்னேன்.
"வெரிகுட்... மொத்தமுள்ள 1330 குறளிலும் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?' என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.
"திரு திரு' வென விழித்த என்னை, அலட்சியமாகப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் நண்பர் .
"தெரியலியே" எனச் சொன்னேன்.
வெற்றிச் சிரிப்பு ஒன்றை உதிர்த்து,"42 ஆயிரத்து,194 எழுத்துக்கள்.. எண்ணிப் பார்த்துவிட்டேன்..." என்றார்.
இவரை வெட்டி ஆபிசர் என்பதா? விவேகமான ஆராய்ச்சியாளர் என்பதா?
*****************************************************************************************
--எழுதியது யாரோ?
*****************************************************************************************
அதிர்ச்சியூட்டும் அந்த கால தண்டனைகள் பற்றி அறிந்து கொள்வோமா?
பெண்களை பலவந்தப் படுத்தினால் முட்டி போட வேண்டும். இரண்டு கை களையும் தலைக்கு மேல் தூக்க வேண்டும். கைவிரல்களை கூப்பாமல் விரிக்க வேண்டும். அந்த விரல்களின் மத்தியில் ஒரு இயந்திரம் போன்ற ஒன்றை மாட்டுவர். அப்படியே பத்து விரல்களையும் "டக்' கென்று துண்டித்து விடும். துண்டிக்கப்பட்டவனை தெருக்களில் போக விட்டு விடுவர்.
* அடுத்தது, காலின் பின் பக்கத்திலிருக்கும் பெரிய நரம்பை அறுத்து விடுவர்.
* திருடன் என்றால் அவனுடைய முதுகில் இரும்பைக் காய வைத்து சூடு வைப்பர்.
* இடதுகாலில் வளையம் போட்டு ஒரு தூணுடன் இணைப்பது; கழுத்தில் ஒரு வளையம் மாட்டி அதையும் அதே தூணுடன் இணைப்பது. குற்றவாளி உட்காரவும், நிற்கவும் முடியுமே தவிர இரவு நேரங்களில் படுத்து தூங்கவே முடியாது.
* இரும்புச் சங்கிலிகளை ஒன்றாக எடுத்துக் கட்டிக் கொண்டு தெருத் தெருவாக ரத்தம் வடிய, வடிய அடித்துக் கொண்டே வருவர்.
* சிறு குற்றங்கள் செய்கிறவர்களை முழங்காலில் நிற்க வைத்து இரண்டு கைகளையும் இருவர் பிடித்துக் கொள்வர். பிறகு பிங்-பாங் விளையாடும், "பேட்' போல ஒரு பலகையை எடுத்து பிடித்து, ஓங்கி கன்னத்திற்கு 12 அடி அடிப்பர். மூன்று, நான்கு அடிகள் அடிக்கும்போதே ரத்தம் வடிய ஆரம்பித்து விடும். இது ஆற, அநேக நாட்களோ, மாதங்களோ ஆகும். சிலர் ஜன்னி கண்டு இறந்தே விடுவர்.
பயப்படாதீர்கள்! இதெல்லாம் இங்கல்ல, சீன தேசத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள்!
— தமிழக ஊர்களின் தனிச்சிறப்பு என்ற நூலில் பிலோ இருதயநாத்.
3 கருத்துகள்:
நல்ல பகிர்வு!
அருமையான பகிர்வு. நன்றி.
"பயப்படாதீர்கள்! இதெல்லாம் இங்கல்ல, சீன தேசத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள்!"
நீங்கள் சொல்வதை பார்த்த இதை படிக்கிறவங்க எல்லாம் மேல உள்ள தப்புகளை செயுறமத்ரி அல்லவே உள்ளது.
கருத்துரையிடுக