படத்தில் இருப்பவர்கள் என் அப்பாவின் அப்பாவும் , என் அப்பாவின் பேரனும் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அவரின் வயது 90, அவனின் வயது 9 மாதங்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இருவருக்கும் பொதுவான ஆர்வங்கள் -புத்தகங்கள்,இசை,கதை கேட்டல், விளையாடுதல்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அவரின் ஆர்வம் -படிப்பதற்கு (இன்னமும் கண் கண்ணாடி இல்லாமல்)
அவனின் ஆர்வம் - கிழிப்பதற்கு(கண்ணாடி இல்லாமலே?)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அவரின் ஆர்வம் -செய்தி கேட்பதற்கு!
அவனின் ஆர்வம் - செய்தி பார்ப்பதற்கு!((சன் டி வி செய்திக்கு முன் வரும் இசைக்கோவை)
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அவரின் ஆர்வம் - அவர் சொல்லிக்கொண்டே இருப்பதை, நாம் கேட்டுக்கொண்டே இருக்க!
அவனின் ஆர்வம் - நாம் சொல்வதை, அவன் கேட்டுக்கொண்டே இருக்க!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அவரின் ஆர்வம் - நாம் விளையாடுதலை வேடிக்கை பார்க்க!
அவனின் ஆர்வம் - அவன் விளையாடுதலை நாம் வேடிக்கை பார்க்க!
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இப்படி நிறைய ஒற்றுமைகள், அதிலும் சில வேற்றுமைகள்!
என் மனதிற்கு மகிழ்வைத் தரும் புகைப்படம்.
3 கருத்துகள்:
மிக அருமையான ஒப்பீடு.
அழகான படம்.
தாத்தாவும் அழகு,
குட்டி பையனும் அழகு.
அழகான ஒப்பீடு
ஹாஹா. எப்டி எல்லாம் ஒப்பிடறாங்க? :))
கருத்துரையிடுக