ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்

சனி, 18 ஏப்ரல், 2009

வடகரை வேலன் அண்ணாச்சிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் !

எழிலன்: ரொம்ப நன்றி மாமா(இப்படி கூப்பிடலாமா, இல்ல.........)!
எங்க அப்பாவுக்கு சரியான நேரத்துல உதவி பண்ணி இருக்கீங்க!
-----------------------------------------------------------------------------------
இன்னிக்கு சாயந்திரம் வீட்லேருந்து பக்கத்துல இருக்கிற கடைக்கு போகலாம்னு வண்டி எடுத்துட்டு கிளம்பிபோனேன். இது கோவையி சாயந்திரத்துல ரொம்ப பரபரப்பான ஒரு சாலை.

-----------------------------------------------------------------------------------

"ஏங்க, துணி அயர்ன் பண்ண குடுத்தீங்களே போய் வாங்கீட்டு, அப்படியே எவர்சில்வர் கடைக்கு போயிட்டு வாங்களேன்",

" ஒரு அஞ்சு மணிக்கு போறேம்மா"
-----------------------------------------------------------------------------------
பத்து நிமிஷம் கழிச்சி..............
-----------------------------------------------------------------------------------
" ஹலோ, வணக்கம். நான் சிவக்குமரன் பேசறேன்"
"சொல்லுங்க சிவா"
"சார் கோயம்பத்தூர் -ல இருக்கீங்களா?"
"ஆமாங்க, சொல்லுங்க"
"சார், ஒரு சின்ன உதவி"
"சொல்லுங்க"
"சார், இங்க ஒரு சின்ன விபத்து"
"எங்கிங்க"
"இங்க பெருமாள் கோயில் பஸ் ஸ்டாப் இருக்கு இல்லீங்களா? அதுக்கு பக்கத்துலங்க!"
"நான் இப்ப வந்துடுறேன், சிவா"

-----------------------------------------------------------------------------------
சொன்ன மாதிரியே பத்து நிமிஷத்துல அண்ணாச்சி வந்துட்டாங்க . மூணு பைக் ஒன்னோட ஒன்னு மோதிதாங்க விபத்து! எனக்கு அடி எதுவும் இல்ல. எனக்கு எதிர்த்தாப்புல வந்தவருக்கு தாங்க நல்ல அடி. நான் கோயம்புத்தூர் வந்து இரண்டு மாசந்தாங்க ஆகுது. அண்ணாச்சி கூட எனக்கு நேரடி பழக்கம் எதுவும் இல்ல. எந்த நம்பிக்கையில நான் அண்ணாச்சிய கூப்டேன்னு தெரியல. இந்த உதவற குணம் இயல்பா இருந்தாலொழிய வராது. ஏன்னா நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் கிராமத்துல. அங்க கேட்கிற மாதிரியே சட்டுன்னு உதவி கேட்டுட்டேன்.

எங்க தாத்தா அடிக்கடி சொல்வாரு, சரியான நேரத்துல சரியான உதவின்னு, இன்னிக்கு அதை உணர்ந்தேன்!

-----------------------------------------------------------------------------------
எனக்கு சரியான முறையில நன்றி சொல்ல தெரியல!

ரொம்ப நன்றிங்க அண்ணாச்சி!

6 கருத்துகள்:

Thamira சொன்னது…

சிறந்த குணங்கள் கொண்டவர் வேலன். அவரை மேலும் மதிப்புக்குரியவராக்குகிறது இந்தப்பதிவு. நன்றி சிவக்குமரன், நன்றி வேலன்..

கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…

ஒருத்தருக்கு ஒருத்தர் உதவுரதுதான் மனித இயல்பு.. நண்பர் வடகரை வேலனுக்கு வாழ்த்துக்கள்.. வண்டியில் போகிம்போது கொஞ்சம் கவனமாக இருங்கள் சிவா..

வெயிலான் சொன்னது…

கோவை, திருப்பூரில் வண்டியில் தனிக்கவனத்துடன் செல்ல வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

நம்ம அண்ணாச்சி இளகிய மனம் உடையவர். அவர் உதவியதை நினைவு கூர்ந்து பாராட்டும் உங்களுக்கும், அண்ணாச்சிக்கும் பாராட்டுகள்.

சிவக்குமரன் சொன்னது…

ஆதிமூலகிருஷ்ணன், கார்த்திகைப் பாண்டியன், ரமேஷ் மற்றும் கோவி.கண்ணன உங்கள் அன்புக்கு நன்றி..

selventhiran சொன்னது…

அது எப்படி என்னைக் கூப்பிடாமல் அண்ணாச்சியைக் கூப்பிட்டீங்க...உங்க மேல வழக்கு தொடுப்பேன்.