மாப்ள எப்படிரா இருக்க? ரொம்ப நாளாச்சு மாப்ள!
உனக்கு ஞாபகம் இருக்கா? ஒரு ராத்திரி, இரண்டாவது பள்ளிக்கூடத்து வராண்டா, என் வாழ்க்கையை திருப்பி போட்ட அந்த நாள். நீ சொன்ன அந்த வார்த்தை 'எனக்கு மறக்க முடியாத வார்த்தைகள்' இன்னிக்குதான் புதுசா வாழ்க்கை வாழ ஆரம்பிக்கிரோமின்னு நீ சொன்ன வார்த்தை. பத்து வருஷம் இருக்குமா மாப்ள!
காலத்தின் கட்டாயம்/வாழ்க்கை தேவைகள், நம்மை பிரித்து போட்ட நிகழ்வுகள் இன்னிக்கு எல்லாத்தையும் அசை போடறேன் மாப்ள.
மாப்ள இதையெல்லாம் யோசிக்க, உன் தினசரி வாழ்க்கையில நேரம் இருக்காடா?
பெருமாள் கோயில் திண்ணை,ஏரிக்கரை , தாடிக்காரன் டீக்கடை, மதகடிப்பட்டு பார்......ஏதாவது...
வழக்கமா எல்லா நண்பர் குழுவிலும் வர்ற மனஸ்தாபமா இதுவும் இருக்கா கூடாதான்னு ரொம்ப நாள் நான் கனவு கண்டிருக்கேன் மாப்ள..
இப்பவும் எல்லாரும் மறுபடியும் தினசரிகளை பத்தின கவலை இல்லாம கொஞ்ச நேரமாச்சும் அந்த நாள் மாதிரி இருக்கணும்னு ''அப்ப அப்ப தோணும் மாப்ள''? உனக்கு என்னிக்காவது தோணியிருக்காடா?
இது உனக்குதான் சொல்றேன்னு உனக்கு புரிஞ்சாலே எனக்கு சந்தோசம் மாப்ள!!
இன்னிக்கு எனக்கு ப்ரமோஷன் கிடைச்சிருக்குடா...
இதை பகிர்ந்துக்க எனக்கு உன்ன விட்டா ஆளில்ல மாப்ள!!
7 கருத்துகள்:
:) feelings of india?
கருத்து வேறுபாடுகள் சகஜம். மறந்த்திரு தோஸ்த்.
:)
:)
:)
:)
:)
கருத்துரையிடுக