வருடம் 1999
நேரம் பின் மாலை பொழுது 8.55 மணி.
ஆதித்யா டிசைனிங் ஸ்டுடியோ --
-----------------------------------------------------------------------------
ஆகாஷ்: சார், நான் கிளம்பறேன் சார்,
மேலாளர் : இருப்பா, இந்த ஒரு போட்டோ மட்டும் முடிச்சுட்டு கிளம்புப்பா, கொஞ்சம் அவசரம்.
ஆகாஷ் : 9 மணிக்கு கடைசி பஸ் சார், அதோட இல்லாம மழை வேற பெய்யுது.
மேலாளர் : சரிப்பா, காலையில கொஞ்சம் சீக்கிரம் வந்துடுப்பா.
ஆகாஷ்: சரிங்க சார் , கிளம்பறேங்க சார்.
-----------------------------------------------------------------------------
விழுப்புரம் பழைய பேருந்து நிலையம்.........................
சார் 8- ஆம் நம்பர் பஸ் போயிடுச்சுங்களா ?
இன்னும் இல்ல தம்பி அர அவரு லேட்டாம்!
-----------------------------------------------------------------------------
டேய் ஆகாஷ் டேய் !!
ஆகாஷ் :வாடா மாப்ள
சுரேஷ் : வா மாப்ள வண்டி அர மணி நேரம் லேட்டாம், ஒரு தம் போட்டுட்டு வரலாம்.
ஒரு டீ சொல்லு மாப்ள..
ஆகாஷ்: சுரேஷ், வேற வேலை பாக்கணும்டா, சம்பளம் பத்தலடா.
சுரேஷ் : ஏண்டா, இப்ப இன்னா தராங்க.
ஆகாஷ்: எங்கடா, வர்றது பஸ்சுக்கும், தம்முக்கும், தண்ணிக்குமே சரியா போவுது மாப்ள.
சுரேஷ் : சரிடா பாப்போம். இன்னாடா மழை இந்த ஊத்து ஊத்துது. இன்னிக்கு பஸ் வந்த மாதிரிதான்.
-----------------------------------------------------------------------------
சுரேஷ் : டேய் டேய் அங்க பாரு மாப்ள...
ஆகாஷ்: ஏண்டா கத்தற?
சுரேஷ்: அங்க பாரு மாப்ள, யார்ராது, இந்த மழையில கொஞ்சம் கூட கவலைப்படாம நனைஞ்சுக்கிட்டு நிக்கிறா?
ஆகாஷ்: ஒன்ன மாதிரிதாண்டா நானும் நிக்கிறன்.
சுரேஷ்: ஐயோ மாப்ள, எவனுக்கு குடுத்து வச்சிருக்கோ தெரியலியே. இவ்ளோ நாளா இப்பிடி ஒரு பிகர, இந்த பஸ் ஸ்டாண்ட்ல எப்பிடிரா மிஸ் பண்ணோம்.
ஆகாஷ்: தே ச்சீ, கம்முனு இருடா. பஸ் வருதானு பாரு. பசிக்குது, சீக்கிரம் ஊருக்கு போவணும்.
சுரேஷ் : டேய் பஸ் வருதுடா வா வா
சுரேஷ் : டேய் மச்சான், குதிர நம்ம பஸ்ஸ பத்துதான் மாப்ள வருது.
ஆகாஷ் : கம்முனு இருக்கமாட்ட.
-----------------------------------------------------------------------------
கண்டக்டர் சார் இந்த பஸ் அனந்தபுரம் போகுங்களா?
கண்டக்டர்: போவும்மா சீக்கிரம் வாம்மா. நேரமாச்சி!
-----------------------------------------------------------------------------
ஹேய்ய் மாலினி, எப்போ வந்த ஊர்லேர்ந்து?
ஹேய்ய் சுதாங்கி, நீ எப்போ வந்த? நான் வந்து ஒரு வாரமாவுது! இங்க ஒரு இன்டர்வியுக்காக வந்தேன்.
சுதாங்கி: எங்க?
மாலினி: ஆதித்யா டிசைனிங் ஸ்டுடியோ.
சுதாங்கி: ஹே நானும் அங்கதாண்டி இருக்கேன்! ஒரு நிமிஷம்!!
சுதாங்கி: ஹே ஆகாஷ் இங்க வாயேன்......................
தொடரும்-----------------------------------------------------------------------------
1 கருத்து:
தங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன தொடருங்கள்
கருத்துரையிடுக