...........................................................................
ஆட்டோ , ஆட்டோ,
எங்க சார் போவணும்,
ரயில்வே ஸ்டேஷன் போவணும்,
100 ரூவா குடு சார்,
தர்றேன் வண்டி எடுங்க , அவசரமா போவணும், 3.50 மும்பை ரயில புடிக்கணும்,
டேய் செந்திலு டேய்
சார் உங்களைத்தான் சார் கூப்பிடறாங்க.
யாருங்க ,
எங்கடா போற
நான் அவசரமா போறன்டா , வந்து சொல்றேன், நீங்க வண்டி எடுங்க.
3.50 க்குதான சார், மணி 3.35 தான் சார் ஆவுது. நம்ம வண்டி ஜெட் மாதிரி சார். தொட்டா பறக்கும்.
யப்பா நீ ரோட்டுலயே வண்டி ஓட்டு. பேச்ச கொற, வண்டி எடு
......................................................
'மாலினி' விழுப்புரம் சரியான நேரத்துக்கு போய்டுவானாடி!
'ஏண்டி இப்பிடி படுத்தற, அதான் வண்டி கரெக்ட் டைம் தான்னு சொல்றாங்கல்ல, ஒரு இடமா ஒக்காரு'.
......................................................
ஏம்ப்பா வண்டி ஜெட் மாதிரின்னு சொன்ன, நீ போறதுக்குள்ள train போய்ட போகுது, அப்புறம் அவ்ளோதான்.
சார் கம்னு உக்காரு சார், இன்னும் பத்து நிமிஷம் க்கீது.
......................................................
இன்னாடி train- னுக்குலாமாடி சிக்னல் இருக்கும். அஞ்சு நிமிஷமா இங்கயே நிக்கிது.
சுகந்தி இன்னா ஆச்சி உனக்கு, கொஞ்சம் பொறு செல்லம்.
......................................................
யே யே இன்னாப்பா ஆச்சி ஆட்டோவுக்கு,
சார்ர்ர், பெட்ரோல் தீந்து போச்சி சார், கொஞ்சம் பொறு சார், பெட்ரோல் பங்க் தோ கிது. போட்னு போய்டலாம்.
ஏன்யா இப்பிடி பண்ற,ட்ரெய்ன மிஸ் பண்ணா நான் காலி.
தோ போய்டலாம் சார்,
......................................................
யே சுகந்தி தோ விழுப்புரம் ஸ்டேஷன் தெர்து பார்.
......................................................
சீக்கிரம் போய்யா, train கிளம்பிட போவுது.
......................................................
ப்பா ஒரு வழியா விழுப்புரம் ஸ்டேஷன் வந்துடுச்சிடி.
......................................................
சார், சார், காசு,
இந்தா காசு,
"எதுக்கு இந்த ஆள் இந்த ஓட்டம் ஓடரானு தெரியலையே,"
சார் மும்பை வண்டி கிளம்பிடுச்சா,
இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்குதுபா, பொறுமையா போ
......................................................
மாலினி, மாலினி நீ சாப்ட வரலியா, இங்க தயிர் சாதம் நல்லா இருக்கும், இத விட்டா renikunta- நைட் பதினொரு மணிக்குதான், அங்கயும் எதுவும் கிடைக்காது.
போடி தின்னி பண்டாரம், இந்த தயிர் சோத்துக்குதான் இவ்ளோ நேரம் குதிச்சுக்கிட்டிருந்தியா. போ போ போய் கொட்டிக்க.
......................................................
சார், என்ஜின் டிரைவர் மணி எங்கங்க.
யாரு செந்திலா, என்னப்பா அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்திரிக்கியா. உன்னத்தான் தேடிக்கினு இருந்தாரு. தோ .
இன்னா செந்திலு, அம்மா நீ மூணு மணிக்கே கிளம்பிட்டேன்னு சொன்னுச்சி.
இல்லப்பா வழியில ஒரு friend- பார்த்திட்டு வந்தன், அதான்.
சரி சரி சாப்பாட குடு போவும்போது சாப்டுக்குறேன். நேரமாச்சி. மொபைல vibration- ல வச்சிருக்கியா, டிர்ர்ர்ருனு சத்தம் வருது பாரு.
சரிப்பா நான் கிளம்பறேன்.
''"ஹலோ, சொல்லு செல்லம்,
என்ன ட்ரெய்ன புடிச்சிட்டிங்களா,
ம்ம் வந்து சொல்றேன்.""
......................................................
8 கருத்துகள்:
ட்ரெய்ன பிடிச்சிட்டீங்கள்ள அவ்வளவு தான். வந்துட்டே இருங்க.
வாழ்த்துக்கள். தமிழ்மணத்துலேயும் இணைச்சிருங்க.
வாழ்த்துக்கு நன்றி வெயிலான்..
நல்ல முன்னேற்றம் சிவா. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
Sweet. Wanted to do a tamil blog for sometime, but did not have the enthusiasm to do it. I will add your blog to my regular reading list.
Please keep the good work.
Suresh
(did not figure out how to do tamil comments yet, but did no want to do an anglicized tamil response either.)
ஏதோ மணிரத்னம் படம் பாக்குற மாதிரி ஒரு பீல் நண்பா.. நல்லா இருக்கு.. தொடருங்கள்..
nalla irukkunga....
super aa eluthuringa
வருகைக்கு வாழ்த்துக்கும் நன்றி,
வடகரை வேலன்,
சுரேஷ்,
கார்த்திகைப் பாண்டியன்,
மேவி
கருத்துரையிடுக