ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



சனி, 30 மே, 2009

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகமும் இல்லை....



டேய் மாப்ள,

என்னடா,,

ஒரு பழமொழி சொல்ட்டுமாடா,

சொல்லித்தொலை, வேணம்னா விடவா போற!(ஒரு கட்டிங் வாங்கி குடுத்துட்டு, இந்த தண்டனை வேறயா?)

இதனால் சகலமானவர்க்கும் தெரிவிப்பது என்னவென்றால்,'அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகமும் இல்லை'.

டேய், கொஞ்சம் பொறுமையா பேசுடா, ரோட்ல போறவன் வர்றவன் எல்லாம் நம்மளையே பார்க்குறான் பாரு..

இனி அவனே தணிந்த குரலில் சொல்கிறான்.....
---------------------------------------------------------------
,'அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகமும் இல்லை'.

இந்த வார்த்தைகள் அவ்வப்போது என் வாழ்க்கையில் இடறிக்கொண்டு இருந்திருக்கின்றன. நான் ஒரு நல்ல தொகையை சம்பளமாக பெறும்வரை.

என் வருமானம் மாதச் சம்பளக்காரர்களில் சற்று வித்தியாசமானது.
--------------------------------------------------

ஒண்ணாம் தேதியன்று சம்பளம்.
பத்தாம் தேதியன்று முன் மாத ஊக்கத் தொகை.
இருபதாம் தேதியன்று முன் மாத செலவுத் தொகை(expenses)

-------------------------------------------------------------

இந்த முறை எனக்கும் சற்று வசதியாகத்தான் இருந்தது.

மாதத்தின் எல்லா நாட்களிலும் கையில் காசு புழங்கிக் கொண்டு இருந்ததால் சேமிப்பு பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படவில்லை.

எல்லாம் நல்லத்தான் போயிட்டு இருந்தது. அவன் வர்ற வரைக்கும்.
முந்தாநேத்து அவன் வந்தான்,

'என் நல்ல நண்பன்'.
டேய் குமாரு,ஊருல இருந்து ஒரு வேலையா வந்தேன் மாப்ள, வந்த இடத்துல கொஞ்சம் செலவாய்டுச்சி. ஒரு இரண்டாயிரம் குடு மாப்ள. ஊருக்குப் போய் உனக்கு அனுப்பிடுறேன்' அப்படின்னு சொன்னான்.

சரின்னு நம்பி...

'ஏம்மா, அந்த காசு ஒரு இரண்டாயிரம் குடு',

'ஏங்க,இருக்கிறதே 1800 தான்',

'சரி, பரவாயில்ல குடும்மா. நாளைக்கு அனுப்பிடுவான்',

'நாளைக்கு பையனுக்கு ஆஸ்பத்திரிக்கு போகணும்'

'சயந்திரம்தானே, பார்த்துக்கலாம்'

டேய், இந்தாடா. மறந்துடாதேடா. இருக்கிற காச எல்லாம் தொடச்சி குடுத்துஇருக்கேன்.
-------------------------------------------------------------

ஏங்க, எங்க இருக்கீங்க. சாயந்திரம் ஆறு மணிக்கு டாக்டர் கிட்ட போகணும்.
சரிம்மா வந்திடுறேன்.
--------------------------------------------------------
ஏங்க, எங்க இருக்கீங்க. மணி அஞ்சரை ஆச்சி. சீக்கிரம் வாங்க.
தோ, வரேம்மா.
-------------------------------------------------------
ஏங்க, மணி அஞ்சே முக்கா ஆச்சி. உங்ககிட்ட காசு இருக்காதுன்னு எனக்கு தெரியும். நீங்க வாங்க, நான் பக்கத்து வீட்டு அக்காகிட்ட வாங்கி வச்சிருக்கேன்.
---------------------------------------------------------
ஆஸ்பத்திரி போய் வந்த பின்பு,...
என்ன ஆச்சிங்க? உங்க ''பிரண்டு'' ஊருக்கு போயிட்டு அனுப்பறேன்னாரே அனுப்பலியா?

என்ன ஆச்சின்னு தெரியலம்மா, போன் வேற காலையில இருந்து நாட் ரீச்சபிள்ள இருக்கு.
!@#$%^&*()_$@$!%%^%@#@%#@%%@@#@%^#$^%&%$#

உங்களைத்தான், ஏங்க காதுல விழுதா, ஒரு பழமொழி சொல்றேன், மண்டையில வச்சிக்கோங்க.

'அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு இவ்வுலகமும் இல்லை'.

கருத்துகள் இல்லை: