ஒண்ணுமில்ல சும்மாக்காட்டியும்



வியாழன், 19 மார்ச், 2009

ஹேய், ஐ லவ் யு, ஐ லவ் யு, உன்னிடத்தில் மெல்ல மெல்ல.......


ரெண்டு நாள் விடுமுறையில ஊருக்கு போயிட்டு நேத்து வரும்போதுதான் அவளை பார்த்தேன். ....

யார பாத்த, எங்க பாத்த?

ஒரு எட்டு வருஷம் பின்னே போலாமா.
ஏய் என்னா, பிளாஷ் பேக்கா?
-------------------------------------------------------------------------------------------

அவள்(ங்க): ஆகாஷ், எங்க வீட்ல மாப்பிள்ள பார்த்துட்டு இருக்காங்க. என்ன பண்றது?

நான்: நான்வந்து பொண்ணு கேட்கட்டுமா?

அவள்(ங்க) : அதுல ஒரு சின்ன பிரச்சினை இருக்குங்க.

நான்: என்னம்மா?

அவள்(ங்க): எங்கப்பாவுக்கு கவர்ன்மென்ட் மாப்பிள்ளைதான் வேணுமாம்.

நான்:ஏன், அவரு கல்யாணம் பண்ணிக்க போறாராமா?

அவள்(ங்க):சும்மா விளையாடாதீங்க.

நான்:சரி சொல்லும்மா நான் என்ன பண்ணனும்.

அவள்(ங்க): சீக்கிரமா ஒரு கவர்ன்மென்ட் வேலை வாங்குங்க.

நான்:அது என்ன கடையிலயா விக்கிது உடனே வாங்கிக்க.

-------------------------------------------------------------------------------------------
(இரண்டு மாதம் கழித்து )


சுகந்தி: ஆகாஷ் , .....அவள் இதை உங்ககிட்ட குடுக்க சொன்னா. இனிமே அவளைப் பார்க்கவோ அவகூடப் பேசவோ வேண்டாம்னு சொல்லச் சொன்னா.

-------------------------------------------------------------------------------------------
நிகழ் காலத்துக்கு வரலாமா?

சேலம் பஸ் ஸ்டாண்ட்,

அவங்க(ள்): எப்படி இருக்கீங்க? எத்தனை குழந்தைங்க? எங்க அவங்க வரலையா?

ஆகாஷ் : ..!!!

அவங்க(ள்): என்னங்க இவருதான் நான் சொல்லல எங்க எதிர் வீட்டில் இருந்தாங்கன்னு அந்த அண்ணன்?!!

மறக்காம என்னை கேட்கவேஇல்லை.. நீங்க என்ன பண்றீங்கன்னு?

7 கருத்துகள்:

ஆண்ட்ரு சுபாசு சொன்னது…

மறக்காம என்னை கேட்கவேஇல்லை.. நீங்க என்ன பண்றீங்கன்னு?//

வேறென்ன கவர்மென்ட் உத்தியோகம் தானே??

சிவக்குமரன் சொன்னது…

அண்ணன்களே மற்றும் அக்காக்களே வணக்கம். வர்றதுதான் வரீங்க, ஒரு ஓட்டு போட்டுட்டு போனீங்கன்னா பொது சேவைய தொடர்றதா வேணாமான்னு ஒரு முடிவுக்கு வர வசதியா இருக்கும்?!!

மோனி சொன்னது…

ஓட்டு வாங்குறதோட சரி
அதுக்கப்புறம்
எங்க ஏரியால யாருமே
பொது சேவை செய்யறது இல்லையே ?

சரி லூசுல விடுங்க
நல்லாத்தான் இருக்குங்குற
உண்மைய சொல்லிடுறேன் .

மந்திரன் சொன்னது…

hero : ஆகாஷ்
mediator : சுகந்தி
heroine = ???

மந்திரன் சொன்னது…

எதார்த்தமான பதிவு

பெயரில்லா சொன்னது…

//
அவங்க(ள்): என்னங்க இவருதான் நான் சொல்லல எங்க எதிர் வீட்டில் இருந்தாங்கன்னு அந்த அண்ணன்?!!
//

Kalakitinga.........

radhu சொன்னது…

ada viduknga boss ithu ellam satharanam